முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ‘நல்லா தூங்கிட்டு படம்பார்க்க வாங்க’ – சிம்பு ரசிகர்களுக்கு கவுதம் மேனன் வேண்டுகோள்…

‘நல்லா தூங்கிட்டு படம்பார்க்க வாங்க’ – சிம்பு ரசிகர்களுக்கு கவுதம் மேனன் வேண்டுகோள்…

கவுதம் மேனன்

கவுதம் மேனன்

ரசிகர்கள் முந்தைய நாள் சரியாக தூங்காமல், முதல்நாள் முதல் காட்சிக்கு வரும்போது படம் அவர்களுக்கு சரியான அனுபவத்தை கொடுப்பதில்லை.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வரும் ரசிகர்கள் நன்றாக இரவில் தூங்கிவிட்டு வரவேண்டும் என படத்தின் இயக்குனர் கவுதம் மேனன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சி அதிகாலை 4, 4.30, 5 மணிக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதனைப் பார்த்து விட்டு ரசிகர்கள் தெரிவிக்கும் விமர்சனங்கள் படத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

பெரும்பாலும் முதல்நாள் முதல் காட்சி ரசிகர்களுக்கு பிடித்து விட்டால், மற்ற காட்சிகள் எந்த சிக்கலும் இல்லாமல் ஹவுஸ்ஃபுல்லாகி விடுகின்றன. அதேநேரம் ரசிகர்கள் முந்தைய நாள் சரியாக தூங்காமல், முதல்நாள் முதல் காட்சிக்கு வரும்போது படம் அவர்களுக்கு சரியான அனுபவத்தை கொடுப்பதில்லை.

Ratchasa Maamaney: பொன்னியின் செல்வன் ‘ராட்சஸ மாமனே’ லிரிக் வீடியோ வெளியீடு!

இதனால் நல்ல முறையில் எடுக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படங்கள் சில, முதல்நாள் முதல் காட்சி ரசிகர்களை திருப்திபடுத்த தவறி விட்டன. இதனை உறுதி செய்யும் வகையில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் முதல்நாள் முதல் காட்சி காலை 8 மணிக்குத்தான் ஆரம்பிக்கப்பட்டது.

' isDesktop="true" id="801497" youtubeid="AwG-AtAtiB8" category="cinema">

இந்த தாமதத்திற்கு முதலில் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி காணப்பட்டாலும், 8 மணிக்கு படத்தை பார்த்தவர்களை படம் திருப்தி அடையச் செய்தது. தற்போது இந்தப் படம் தனுஷின் கெரியரில் மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்திருப்பதால், அடுத்து வரும் படங்களிலும் இதே ஃபார்முலாவை கடைபிடிக்க தனுஷ் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாளை மறுதினம் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படம் ரிலீசாகிறது. இதுகுறித்து பேட்டி அளித்துள்ள இயக்குனர் கவுதம் மேனன், முதல்நாள் முதல் காட்சியை பார்க்க வரும் ரசிகர்கள் நன்றாக தூங்கிவிட்டு வர வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.

top videos

    தமிழ்நாட்டில் வெந்து தணிந்தது காடு FDFS அதிகாலை 4.30-க்கு தொடங்குகிறது. இங்கு மட்டும் 600க்கும் அதிகமான திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.

    First published:

    Tags: Actor Simbhu, Gautham Vasudev Menon