Kajal Aggarwal: காஜல் அகர்வால் பிறந்தநாளுக்கு ரொமாண்டிக்காக வாழ்த்து சொன்ன கெளதம் கிட்சுலு!

காஜல் அகர்வால் - கெளதம் கிட்சுலு

25 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் காணப்படாத பல படங்கள் உள்ளன. "30 படங்கள் 30,00,000+ மகிழ்ச்சியான நினைவுகள்” என அதற்கு தலைப்பிட்டிருந்தார்.

  • Share this:
    மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு உருகி உருகி வாழ்த்து தெரிவித்திருக்கிறார் நடிகை காஜல் அகர்வாலின் கணவர் கெளதம் கிட்சுலு.

    காஜல் அகர்வால் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார், அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். தனது கணவருடன் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் இந்நாள் காஜலுக்கு இன்னும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. இதையொட்டி நாம் இதுவரை பார்த்தீராத பல படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் கெளதம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    காஜல் அகர்வால் தனது நீண்டகால நண்பர் கெளதம் கிட்ச்லுவை அக்டோபர் 2020-ல் திருமணம் செய்துக் கொண்டார். அவர் இன்று தனது 36-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார், இதையொட்டி அவரது கணவர் ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Gautam Kitchlu (@kitchlug)






    25 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் காணப்படாத பல படங்கள் உள்ளன. "30 படங்கள் 30,00,000+ மகிழ்ச்சியான நினைவுகள்” என அதற்கு தலைப்பிட்டிருந்தார். அதோடு, "காதல் என்பது பாப்கார்னைப் பகிர்வது பற்றியதாக இருக்கலாம். அல்லது உங்கள் 'மீ டைமை' விட்டுக்கொடுப்பதன் மூலம் உங்களுக்கு அதிக 'நம்' நேரம் கிடைக்கும். சூடான கோகோவை குடிக்க விரும்பும் போது அதற்கு பதிலாக ஐஸ்கிரீம் சாப்பிடுவதில் காதல் உற்சாகமாக இருக்கிறது. மதியம் வரை தூங்க நினைத்த நீங்கள் சூரிய உதயத்தைப் பார்ப்பதற்காக எழுந்திருப்பதும் காதல் தான்" என்று குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: