கட்டா குஸ்தி என்ற பெயரே வித்தியாசமாக இருக்கிது அல்லவா. கேரளாவில் இந்த குஸ்தி பிரபலம். தமிழ்நாட்டில் எங்கோ ஒருசில இடத்தில் இது உண்டு. இதனை மையமாக வைத்து ஒரு படம் தயாராகிறது.
கட்டா குஸ்தியில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கின்றனர். விஷ்ணு விஷால் நடித்த சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தை இயக்கிய செல்லா அய்யாவு கட்டா குஸ்தியை இயக்குகிறார். படத்தின் சிறப்பம்சம்? அது படத்தயாரிப்பிலேயே உள்ளது.
கட்டா குஸ்தியை தெலுங்கின் மாஸ் மகாராஜா ரவி தேஜாவுடன் இணைந்து விஷ்ணு விஷால் தயாரிக்கிறார். இந்த தமிழ் - தெலுங்கு காம்போ எப்படி அமைந்தது? அதற்கு காரணம், விஷ்ணு விஷாலின் மனைவி ஜுவாலா கட்டா. அவரும் ரவி தேஜாவின் எக்ஸிக்யூடிவ் ஒருவரும் தோழிகளாம். அவர் மூலமாக ரவி தேஜாவை சந்தித்திருக்கிறார் விஷ்ணு விஷால். தனது எப்ஐஆர், மோகன்தாஸ் படங்களின் ட்ரெய்லர்களையும் காட்டியுள்ளார். அதில் இம்ப்ரசானவர், வேற கதை இருக்கா என்று கேட்க, விஷ்ணு விஷால் செல்லா அய்யாவுவை கதை சொல்ல அனுப்பி வைத்திருக்கிறார். கதை பிடித்துப்போக விஷ்ணு விஷாலுடன் இணைந்து படத்தை தயாரிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
தளபதி 66-ல் ராஷ்மிகா மந்தனா, எஸ்.எஸ்.தமன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நேற்று கட்டா குஸ்தியின் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கியது. சென்னை மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் படம் தயாராகிறது. தொழில்நுட்ப ஏரியாவை பொறுத்தவரை இசை ஜஸ்டின் பிரபாகர், ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம்.நாதன், சண்டைப் பயிற்சி அன்பறிவு என பக்கா டீம்.
கட்டா குஸ்தி ஒரு கலக்கு கலக்கும் என்றே தோன்றுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.