ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் கங்குலியின் பயோ பிக்?

ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் கங்குலியின் பயோ பிக்?

கங்குலி - ஐஷ்வர்யா ரஜினிகாந்த்

கங்குலி - ஐஷ்வர்யா ரஜினிகாந்த்

தோனியின் பயோ பிக்காக, தோனி தி அன்டோல்டு ஸ்டோரி வெளியாகி இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கிரிக்கெட் ஜாம்பவான் கங்குலியின் பயோ பிக்கை ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இன்றைய சூழலில் படு பிஸியாக இருக்கும் நபர்களில் ஒருவராக, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியை நாம் குறிப்பிடலாம். ஐபிஎல் சீசன் 15 தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போட்டி ஏற்பாடுகளை கடந்த சில மாதங்களாகவே கங்குலி தலைமையிலான குழு கவனித்து வந்தது.

தற்போது, இறுதிப் போட்டிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. அதனுடன் இறுதிப் போட்டியில் பெங்களூரு அல்லது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதலாம். நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை பெங்களூரு வென்றது.

”ஒன்றியம் என்பதற்கு பல அர்த்தங்கள்” - விக்ரம் பட பாடலின் சர்ச்சை குறித்து கமல் விளக்கம் 

இவை ஒருபுறம் இருக்க கங்குலியின் பயோ பிக் குறித்த தகவல்கள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. ஏற்கனவே தோனியின் பயோ பிக்காக, தோனி தி அன்டோல்டு ஸ்டோரி வெளியாகி இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.

நேற்று நடந்த ஐபில் எலிமினேட்டர் போட்டியை ஐஷ்வர்யா ரஜினிகாந்த் நேரில் பார்த்து ரசித்துள்ளார். பின்னர் கங்குலியின் இல்லத்தில் அவரை சந்தித்து பேசியதாகவும், அப்போது கங்குலியின் பயோ பிக்கை உருவாக்குவது குறித்து முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று தனது பயோபிக்கை எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் கங்குலிக்கு உள்ளது. கடந்த ஆண்டு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கிரிக்கெட்தான் எனது வாழ்க்கையை மாற்றியது. எனக்கு நம்பிக்கையை தந்தது. கிரிக்கெட் தான் எனது வாழ்க்கை. என்னைப் பற்றிய பயோ பிக்கை நான் கொண்டுவர விரும்புகிறேன்’ என்று கூறியிருந்தார்.

இதையும் படிங்க.. சிம்பு விஷயத்தில் சீரியல் நடிகையை திட்டிய காஜல் பசுபதி! ஷாக்கான ரசிகர்கள்

ஐஷ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ஃபிட்னஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சைக்கிளிங் செல்வது, ஜிம் ஒர்க் அவுட் என ட்விட்டர் இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிடும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

இளம்பெண்கள் பலருக்கு ஃபிட்னஸ் இன்ஸ்பிரேஷனாக ஐஷ்வர்யா மாறி வருகிறார் என்று நெட்டிசன்கள் கமென்ட் செய்துள்ளனர்.

First published:

Tags: Aishwarya, Ganguly