• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்கும் கங்கை அமரன்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்கும் கங்கை அமரன்!

AV33 படப்பிடிப்பு தளத்தில்...

AV33 படப்பிடிப்பு தளத்தில்...

டைரக்டர் வெங்கட் பிரபுவின் தந்தையான இவர் அவ்வபோது முக்கிய கேரக்டரில் நடிக்கவும் செய்வார்.

  • Share this:
    பிரபல இசையமைப்பாளரும், இளையராஜாவின் தம்பியுமான கங்கை அமரன் இயக்குநர் ஹரியின் படத்தில் நடித்துள்ளார்.

    வசனகர்த்தா, பாடலாசிரியர், இயக்குநர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் கங்கை அமரன்.

    இசை அமைப்பாளராக, ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, சுவரில்லாத சித்திரங்கள், ராமாயி வயசுக்கு வந்துட்டா, மௌன கீதங்கள், வாழ்வே மாயம், நம்ம ஊரு நல்ல ஊரு, என் தங்கச்சி படிச்சவ போன்ற மாபெரும் ஹிட் படங்கள் உட்பட சுமார் 55 படங்களுக்கு பணிபுரிந்துள்ளார்.

    ஆரம்பத்தில், 1979-ல் புதிய வார்ப்புகள் , 80-ல் பாமா ருக்குமணி படங்களில் நடித்த கே.பாக்கியராஜ்-க்கு டப்பிங் குரலும் கொடுத்தார் கங்கை அமரன். அதன் பின்பு பாடகராகவும் ஏழு படங்களில் பாடியுள்ளார்.
    சூப்பர் ஹிட் படமான கோழி கூவுது படம் மூலம் டைரக்டராகவும் மாறினார். தொடர்ந்து, எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, கரகாட்டக்காரன், கும்பகர தங்கையா, வில்லு பாட்டுக்காரன், சின்னவர், தெம்மாங்கு பட்டுக்காரன் போன்ற ரிகார்ட் பிரேக் செய்த படங்கள் உட்பட சுமார் 19 படங்கள் டைரக்ட் செய்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதேபோல், 16 வயதினிலே படத்தில் இடம் பெற்ற செந்தூரப்பூவே.. செந்தூரப்பூவே, சோளம் விதைக்கையிலே.. என்ற பாடல்கள் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். கிழக்கே போகும் ரயில் - பூவரசம்பூ.. முள்ளும் மலரும் - நித்தம் நித்தம் நெல்லு சோறு.. நிழல்கள்- பூங்கதவே.. போற்ற சுமார் 35-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.

    டைரக்டர் வெங்கட் பிரபுவின் தந்தையான இவர் அவ்வபோது முக்கிய கேரக்டரில் நடிக்கவும் செய்வார். கரகாட்டக்காரன், இதயம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், சென்னை 28, போன்ற படங்களில் நடித்துள்ளார். அனைத்து படங்களும் ஹிட் தான். 2013-க்கு பிறகு மீண்டும், தற்போது பிரபல டைரக்டர் ஹரி இயக்கத்தில் பெயரிடப்படாத #AV33 என்று உருவாகும் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். காரைக்குடியில் அருண் விஜய் நடித்து வரும் இந்த படத்தில், கதையின் ஒரு முக்கிய திருப்பமான காட்சியில் ஜோசியராக நடித்துள்ளார்.

    தவிர, அந்தப் படத்தில் அருண்விஜய்யுடன் இணைந்து பிரியா பவானிசங்கர், ராதிகா, யோகிபாபு, கருடா ராம், ராஜேஷ், தலைவாசல் விஜய், ஜெயபாலன், புகழ், போஸ் வெங்கட், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, அம்மு அபிராமி மற்றும் பலர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: