Home /News /entertainment /

ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு

ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு

ஜி.வி.பிரகாஷ் மற்றும் படக்குழு

ஜி.வி.பிரகாஷ் மற்றும் படக்குழு

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

'அசுரன்' படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவற்றுக்குக் கிடைத்த வரவேற்பு மற்றும் 'சூரரைப் போற்று' பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பு ஆகியவை தமிழ் சினிமாவில் ஜி.வி.பிரகாஷை ஒரு முக்கிய இடத்துக்கு நகர்த்தியுள்ளது.

இசைமைப்பது ஒருபுறமிருந்தாலும் தான் நடித்து வரும் படங்களின் பணிகளை ஒவ்வொனெறாக முடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.
சமீபத்தில் தான் நடித்து வந்த ‘பேச்சிலர்’ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்திருப்பதாக தெரிவித்திருந்த ஜி.வி.பிரகாஷ், இன்று தனது நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் பூஜையில் கலந்து கொண்டார். சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றி படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

முழுக்க காதலை மையப்படுத்திய க்ரைம் த்ரில்லராக உருவாகவிருக்கும் இந்தப் படத்தின் மூலம் அகிலன் இயக்குநராக அறிமுகமாகிறார். டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. நவீரா சினிமாஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது. 55 நாட்களில் ஒட்டும்மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.



ஜி.வி.பிரகாஷ் உடன் நடிக்கவுள்ளவர்களின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. நவீரா சினிமாஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்ய ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
Published by:Sheik Hanifah
First published:

Tags: G.V.Prakash, Kollywood

அடுத்த செய்தி