Home /News /entertainment /

‘சார் வந்தாரா’ வேடிக்கையான டைட்டில் கொண்ட தமிழ் டப்பிங் படங்கள்!

‘சார் வந்தாரா’ வேடிக்கையான டைட்டில் கொண்ட தமிழ் டப்பிங் படங்கள்!

வேடிக்கையான டைட்டில் கொண்ட படங்கள்.

வேடிக்கையான டைட்டில் கொண்ட படங்கள்.

தெலுங்குத் திரைப்படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும்போது அவற்றின் தலைப்புகள் வேடிக்கையாக அமைந்துவிடுவது வாடிக்கை.

    தமிழ்ப் படங்கள் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நல்ல வரவேற்பைப் பல வருடங்களாகப் பெற்று வருகின்றன. இதனால் தொடர்ந்து தமிழ்த் திரைப்படங்கள் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுவருகின்றன.

    அதே போல் மற்ற மொழித் திரைப்படங்கள் தமிழுக்கு டப் செய்யப்பட்டுத் தொடர்ந்து வெளி வந்துகொண்டிருப்பது எல்லோரும் அறிந்த ஒன்றே. அப்படி தமிழுக்கு டப் செய்யப்படும் வேற்று மொழித் திரைப்படங்களின் தலைப்புகள் சில நேரங்களில் வித்தியாசமாக அமைந்துவிடுவதுண்டு.

    குறிப்பாகத் தெலுங்குத் திரைப்படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும்போது அவற்றின் தலைப்புகள் வித்தியாசமாக வேடிக்கையாக அமைந்துவிடுவது வாடிக்கை. அவற்றில் சில:

    முரட்டுதம்பி

    2007-ம் ஆண்டு தெலுங்கில் யோகி என்ற பெயரில் வெளியான இப்படம் தமிழில் முரட்டுதம்பி என்ற பெயரில் வெளி வந்தது. இதில் பிரபாஸ், நயன்தாரா நடித்திருந்தார்கள்.

    முரட்டுதம்பி 2007-ம் ஆண்டு வெளி வந்தது.


    சார் வந்தாரா

    2012-ம் ஆண்டு சரோச்சாரு என்ற பெயரில் தெலுங்கில் வெளியான இப்படம் சார் வந்தாரா என்ற பெயரில் தமிழில் வெளியானது. இதில் ரவி தேஜா, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

    சார் வந்தாரா 2012-ம் ஆண்டு வெளிவந்தது.


    முடிஞ்சா வாழு

    2015-ம் ஆண்டு ராஜு கரி காதி என்ற பெயரில் தெலுங்கில் வெளியான இப்படம் முடிஞ்சா வாழு என்ற பெயரில் தமிழில் வெளியானது. இப்படத்தை ஓம்கார் இயக்கியிருந்தார்.

    முடிஞ்சா வாழு 2015-ம் ஆண்டு வெளிவந்தது.


    இவனுக்கு சரியான ஆள் இல்லை

    ’சரிலேரு நீக்கெவரு’ என்ற பெயரில் தெலுங்கில் வெளியான இப்படம் ’இவனுக்கு சரியான ஆள் இல்லை’ என்ற வித்தியாசமான பெயரில் வெளியானது. இதில் மகேஷ் பாபு நடித்திருந்தார்

    மகேஷ் பாபுவின் ‘இவனுக்கு சரியான ஆள் இல்லை’.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Tamil and Telugu movies, Telugu, Telugu movie

    அடுத்த செய்தி