மன்மதலீலை திரைப்படத்தின் க்ளிம்ப்ஸை நேற்று சிம்பு வெளியிட்டார். வெங்கட்பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்திருக்கும் இந்தப் படத்தில் முதல் க்ளிம்ப்ஸே இளைஞர்கள் மத்தியில் கிளுகிளுப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாநாடு படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு மன்மதலீலை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இது அடல்ட் காமெடி ஜானரில் தயாராகியுள்ளது. ஹாலிவுட்டில் வெளியான அமெரிக்கன் பை போன்ற ஒரு திரைப்படம் இது என வெங்கட்பிரபு கூறியிருந்தார். அவர் உதாரணத்திற்கு கூறிய திரைப்படம் முழுக்கவே இளைஞர்களின் காமத்தால் நிறைந்தது. ஏற்கனவே கோவா திரைப்படத்தில் இதுபோன்ற ஒரு கதையை வெங்கட் பிரபு முயற்சி செய்தார். ஆனால் படம் கிளிக் ஆகவில்லை. ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா அந்தப் படத்தை தயாரித்திருந்தார். ரஜினி மகளுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று அப்போது விமர்சனங்கள் எழுந்தன.
மன்மதலீலை க்ளிம்ப்ஸ் கிட்டத்தட்ட 40 வினாடிகள் ஓடுகிறது. இது முழுக்க அசோக்செல்வன் சம்யுக்தா ஹெக்டேயையும் ரியா சுமனையும் முத்தமிட்டுக் கொண்டே இருக்கிறார். அதுவும் பிரெஞ்சு முத்தம். இளைஞர்கள் பெருமளவில் இந்த க்ளிம்ப்ஸை பார்த்து பகிர்ந்து வருகிறார்கள். படத்தின் 40 வினாடிகளே இப்படியே இருந்தால் படம் எப்படி இருக்கும் என்ற இளசுகளின் எதிர்பார்ப்பை சரியாக குறி வைத்து அடித்திருக்கிறார் வெங்கட்பிரபு. இந்தப்படத்தில் ஸ்மிருதி வெங்கட்டும் மூன்றாவது நாயகியாக நடித்துள்ளார். ஆக க்ளிம்ப்ஸைவிட படம் பல மடங்கு வேறு மாதிரி இருக்கும்.
Also read... ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!
ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் மன்மதலீலை திரைப்படத்தை தயாரித்துள்ளது. வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனர் மணிவண்ணன் இந்த கதையை எழுதியுள்ளார். திருமணத்துக்கு பிறகு இன்னொரு பெண்ணுடனான காதலை சொல்லும் திரைப்படம் இது. பிரேம்ஜி அமரன் படத்துக்கு இசையமைக்க, தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங் வெங்கட் ராஜன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Simbhu, Venkat Prabhu