இந்தப் படம் வெற்றி பெறும் என்று எனக்கு தெரியும் - வித்யா பாலன்

மிஷன் மங்கள் படம் வெளியான முதல் மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 70 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

news18
Updated: August 18, 2019, 3:35 PM IST
இந்தப் படம் வெற்றி பெறும் என்று எனக்கு தெரியும் - வித்யா பாலன்
வித்யா பாலன்
news18
Updated: August 18, 2019, 3:35 PM IST
மிஷன் மங்கள் படத்தின் கதையை கேட்கும் போதே நிச்சயம் வெற்றி பெறும் என்று எனக்கு தெரிந்தது என்று நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.

பாலிவுட்டில் படங்களின் வெற்றி அந்தப் படத்தின் ஹீரோவின் மார்க்கெட்டை பொருத்தே அமையும். ஹிரோயின்களை முதன்மையாக வைத்து எடுக்கும் பெரும்பாலான படங்கள் தோல்வியையே சந்திக்கின்றன அல்லது லாபத்தை ஈட்ட சின்ன பட்ஜெட் படங்களாக எடுக்கப்படுகின்றன. இந்த நிலை கண்டிப்பாக மாறும் என்று நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.

அக்‌ஷய் குமார், வித்யா பாலன், சோனாக்‌ஷி சின்ஹா, டாப்சி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியான படம் மிஷ்ன் மங்கள். படம் வெளியான முதல் மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.70 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Loading...இந்நிலையில் படத்தின் வெற்றி குறித்து பேசிய நடிகை வித்யா பாலன், ‘முதல் நாள், இரண்டாம் நாள் கலெக்‌ஷன் பத்திலாம் நான் யோசித்தது கிடையாது. எனக்கு படம் வெற்றி பெற வேண்டும். படப்பிடிப்பின் போதே படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை வந்தது. இந்த படத்தில் நானும் இருந்ததில் மகிழ்ச்சி’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மிஷன் மங்கள் படத்தில் மிகபெரிய ஸ்டார் என்றால் அது அக்‌ஷய் குமார் தான். படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலக்‌ஷென் படத்தின் ஹீரோவை வைத்தே முடிவாகிறது. இந்தப் படத்தின் கலெக்‌ஷனும் அக்‌ஷய் குமாரால் தான் அதிகமானது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

தற்போது பெண்கள் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் படங்கள் கூட நல்ல வசூலை ஈட்டுகிறது. இன்னும் சில வருடங்களில் இந்த நிலைமை மாறும். இன்னும் சில காலங்களில் எங்களுடைய பெயர்களும் வெளியில் தெரிய வரும் என்று அவர் கூறியுள்ளார்

Also watch

First published: August 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...