முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஹர்பஜன் சிங் - லாஸ்லியாவின் ஃப்ரெண்ட்ஷிப் டீசர் 3 மொழிகளில் ரிலீஸ்

ஹர்பஜன் சிங் - லாஸ்லியாவின் ஃப்ரெண்ட்ஷிப் டீசர் 3 மொழிகளில் ரிலீஸ்

ஹர்பஜன் சிங் - லாஸ்லியா

ஹர்பஜன் சிங் - லாஸ்லியா

ஹர்பஜன் சிங் - லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள ஃப்ரெண்ட்ஷிப் படத்தின் டீசர் 3 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

  • Last Updated :

ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கித் தயாரிக்கும் படம் ஃப்ரெண்ட்ஷிப். இந்தப் படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் கால் பதித்துள்ளார் பிக்பாஸ் லாஸ்லியா. வில்லனாக பிரபல நடிகர் அர்ஜூனும், நகைச்சுவை கேரக்டரில் சதீஷூம் நடித்துள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடிய ஹர்பஜன் சிங்குக்கு வில்லனாக நடிகர் அர்ஜூனும், ஜோடியாக லாஸ்லியாவும் நடித்திருப்பதால் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்தே அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் இன்று இத்திரைப்படத்தின் டீசரை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் முதல் படத்திலேயே ஹர்பஜன் சிங் ஆக்‌ஷன் ஹீரோவாகவும், கிரிக்கெட் வீரராகவும் நடித்திருப்பது தெரிகிறது. டீசரின் ஒரு சில காட்சிகளில் லாஸ்லியா, அர்ஜூன் உள்ளிட்டோரை இடம்பெறச் செய்தது படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கூட்ட படக்குழு கையாண்டிருக்கும் யுத்தியாகவே பார்க்கலாம்.

' isDesktop="true" id="420571" youtubeid="N90K_ClGsaI" category="cinema">

டீசர் வீடியோவை பகிர்ந்து தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் ஹர்பஜன் சிங், நேர்த்தியான டீசராக வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டிலிருந்து தமிழ் திரைத்துறையில் நடிகராக அறிமுகமாகியிருக்கும் ஹர்பஜன் சிங்குக்கு சினிமா கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

First published:

Tags: Harbhajan Singh, Kollywood, Losliya