முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Isaignani Ilayaraaja: இளையராஜா பாடல்கள் மூலம் இறுதி மரியாதை: நெகிழ வைக்கும் வீடியோ!

Isaignani Ilayaraaja: இளையராஜா பாடல்கள் மூலம் இறுதி மரியாதை: நெகிழ வைக்கும் வீடியோ!

இசைஞானி இளையராஜா

இசைஞானி இளையராஜா

சொல்லியிருந்தபடியே அந்த இளையராஜா ரசிகர் மறைந்து விட, அவரது இறுதி ஆசையை அந்த ரசிகரின் நண்பர்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இறந்தபின் இளையராஜா பாடலோடு தன்னை வழியனுப்புமாறு கேட்டுக்கொண்ட, நண்பனின் ஆசையை நிறைவேற்றிய இளைஞர்களின் செயல் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவில் வசித்து வந்த இசைஞானி இளையராஜாவின் ரசிகர் ஒருவர் தான் இறந்த பின் தன்னை இளையராஜா பாடலோடு வழியனுப்பும் படி தனது நண்பர்களிடம் முன் கூட்டியே கேட்டுக் கொண்டுள்ளார். அவரின் வயது என்ன, ஏதேனும் உடல் நலக்குறைவால் அவர் பாதிக்கப்பட்டிருந்தாரா உள்ளிட்ட விஷயங்கள் எதுவும் தெரியவில்லை.

ஆனால் தான் சொல்லியிருந்தபடியே அந்த இளையராஜா ரசிகர் மறைந்து விட, அவரது இறுதி ஆசையை அந்த ரசிகரின் நண்பர்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பார்வையாளர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சவப்பெட்டியில் உள்ள அந்த இளையராஜா ரசிகரின் உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். அதே சமயம் இறந்தவரின் நண்பர்கள் மாஸ்க் அணிந்தவாறு கூடி நின்று, இளமை எனும் பூங்காற்று உள்ளிட்ட இளையராஜாவின் பாடல்களை பாடி கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Ilaiyaraja, Ilayaraja Song, Music director ilayaraja