கதைய சுட்டா சரியா சுடுங்க... சாஹோ படக்குழுவை விளாசிய பிரெஞ்சு இயக்குநர்!

கதைய சுட்டா சரியா சுடுங்க... சாஹோ படக்குழுவை விளாசிய பிரெஞ்சு இயக்குநர்!
ஜெரோம் சாலே | பிரபாஸ்
  • News18
  • Last Updated: September 3, 2019, 3:02 PM IST
  • Share this:
எனது கதையைத் திருடினால், குறைந்தபட்சம் அதைச் சரியாகச் செய்யலாமே என்று பிரெஞ்சு பட இயக்குநர் ஜெரோம் சாலே கூறியுள்ளார்.

பாகுபலி புகழ் பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் சாஹோ. சுஜீத் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில், ஷ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெராஃப். அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி ஆகியோர் நடித்துள்ளனர்.

யூவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் சமீபத்தில் வெளியாகி வசூலைக் குவித்து வருகிறது. ஆனால் படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்களும் ரசிகர்களால் முன்வைக்கப்படுகிறது.


இந்நிலையில் தனது படத்தை சாஹோ பட இயக்குநர் காப்பி அடித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டினை பிரெஞ்சு த்ரில்லர் பட இயக்குநர் ஜெரோம் சாலே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

2008-ம் ஆண்டு வெளியான லார்கோ வின்ச் என்ற பிரெஞ்சு படத்துக்கும், சாஹோவிற்கும் இருக்கும் ஒற்றுமைகளைச் சுட்டிக்காட்டி ஜெரோம் சாலேவின் ரசிகர்கள் அவருக்கு ட்வீட் செய்து வந்த நிலையில், சுனில் என்றொரு ரசிகர் ஜெரோமை டேக் செய்து ட்வீட் செய்தார். அதற்கு பதிலளித்த ஜெரோம் சாலே இந்தியாவில் தனக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது என்றார்.

மேலும் சில ரசிகர்களும் கேள்வி எழுப்பவே, அனைவருக்கும் பதிலளித்திருக்கும் ஜெரோம், லார்கோ வின்ச்சின் இரண்டாவது ‘ஃப்ரீமேக்’. முதலாவதைப் போலவே மோசமானது. எனவே தெலுங்கு இயக்குநர்களே நீங்கள் எனது படத்தைத் திருடினால் குறைந்தபட்சம் அதைச் சரியாகச் செய்யலாம் இல்லையா” என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

Loading...
வீடியோ பார்க்க: அமெரிக்காவில் பால் பண்ணையை பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி 
First published: September 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...