Home /News /entertainment /

விஜய் விலையில்லா விருந்தகத்தில் அஜித் பெயரில் விருந்து!

விஜய் விலையில்லா விருந்தகத்தில் அஜித் பெயரில் விருந்து!

விஜய் விலையில்ல விருந்தகம்

விஜய் விலையில்ல விருந்தகம்

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளைக் கடந்திருக்கும் அஜித்தை கொண்டாடும் வகையில், அடங்காத அஜித் குரூப்ஸ் ரசிகர்கள் இதனை ஸ்பான்சர் செய்திருக்கிறார்கள்.

    அஜித் திரைக்கு வந்து 30 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் விஜய் விலையில்லா விருந்தகத்தில் இலவச உணவு வழங்கப்பட்டிருக்கிறது. 

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார் தற்போது சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாடினர் ரசிகர்கள். இயக்குநர் விக்னேஷ் சிவன் கூட திரைத்துறையில் 30 ஆண்டுகளைக் கடந்துள்ள அஜித்துக்கு தனது வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் கோவையில் இயங்கி வரும் விஜய் விலையில்லா விருந்தகத்தில், அஜித் பெயரில் இலவச உணவு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளைக் கடந்திருக்கும் அஜித்தை கொண்டாடும் வகையில், அடங்காத அஜித் குரூப்ஸ் ரசிகர்கள் இதனை ஸ்பான்சர் செய்திருக்கிறார்கள். தற்போது இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.



    நன்றி அஜித் சார்... ஏகே 62 இயக்குநர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!

    Free food in the name of Ajith at Vijay's Vilaiyilla Virundhagam, vijay ajith, thalapathy vijay, thala ajith, vijay ajith movie, vijay ajith movies, vijay ajith friendship, விஜய் அஜித், தளபதி விஜய், தல அஜித், விஜய் அஜித் திரைப்படம், விஜய் அஜித் திரைப்படங்கள், விஜய் அஜித் நட்பு, vijay makkal iyakkam, vijay vilaiyilla virundhagam, vjiay ajith fans, விஜய் விலையில்லா விருந்தகம், அஜித் விஜய்
    விஜய் விலையில்ல விருந்தகம்


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தவிர, தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஏகே 61' படத்தின் எஞ்சிய பகுதிகளின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார் அஜித். வங்கி கொள்ளையை அடிப்படையாகக் கொண்ட ஆக்‌ஷன் அட்வென்ச்சர் படமான இது, இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vijay, Ajith

    அடுத்த செய்தி