ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அஜித் வீடு கட்டித்தருகிறார்.. பக்கா ப்ளான் செய்து மோசடி செய்த நபர்.. நெல்லையில் பரபர சம்பவம்!

அஜித் வீடு கட்டித்தருகிறார்.. பக்கா ப்ளான் செய்து மோசடி செய்த நபர்.. நெல்லையில் பரபர சம்பவம்!

நெல்லை சம்பவம்

நெல்லை சம்பவம்

தனது படங்களில் அரசியல் வசனம் இருந்தால் உடனடியாக நீக்க சொல்வார் என இயக்குநர் வினோத் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

நடிகர் அஜித் குமார் கடந்த 2010 ஆம் ஆண்டின் போதே தனது ரசிகர் மன்றத்தைக் கலைப்பதாக அறிவித்தார். 'முதலில் குடும்பத்தை பாருங்கள், என் படங்கள் வெளியானால் மட்டும் திரையரங்கில் வந்து பாருங்கள்' என எப்பொழுதும் தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறிவருகிறார்.

சமீபத்தில் தன்னை தல என்று அழைக்க வேண்டாம், அஜித் குமார் என்றோ, ஏகே என்றோ குறிப்பிட்டால் போதும் என அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனாலும் அவருக்கு இருக்கும் ரசிகர் வட்டம் குறையவே இல்லை. அவரது படங்களுக்கு கிடைக்கும் முதல் நாள் ஓபனிங் திரையரங்க உரிமையாளர்களை மிரள வைக்கிறது.

இதையும் படிக்க | முதல் கார் வாங்கிய சுதா கொங்கரா... மணிரத்னம், சூர்யா, ஜி.வி-யுடன் ஜாலி ரைடு!

இப்படி இருக்க அஜித் ரசிகர் மன்றம் என்ற பெயரில் மோசடி நடந்திருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் விக்ரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் நடிகர் அஜித்குமார் ரசிகர் மன்றம் மூலம், வீடு கட்டித் தருவதாக கூறி ரூ. 1.10 லட்சம் மோசடி செய்ததாக சிவா என்பவர் மீது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

பொதுவாக நடிகர் அஜித் அரசியல் சர்ச்சைகளில் சிக்காமல் கவனமாக இருந்துவருகிறார். தனது படங்களில் அரசியல் வசனம் இருந்தால் உடனடியாக நீக்க சொல்வார் என இயக்குநர் வினோத் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அப்படி இருக்க நடிகர் அஜித் ரசிகர் மன்றம் பெயரில் மோசடி நடந்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Actor Ajith, Fraud