ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரெஞ்ச் படங்களுக்கு நிகராக துணிவுக்கு வரவேற்பு : பிரான்ஸ் தொலைக்காட்சி அஜித் குறித்து ஆச்சரியம் - வைரலாகும் வீடியோ

பிரெஞ்ச் படங்களுக்கு நிகராக துணிவுக்கு வரவேற்பு : பிரான்ஸ் தொலைக்காட்சி அஜித் குறித்து ஆச்சரியம் - வைரலாகும் வீடியோ

அஜித்

அஜித்

பாரிஸில் இவ்வளவு நாட்கள் படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடுவது பெரிய விஷயம் எனவும் அந்த நிகழ்சியில் பேசப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் அஜித்குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி 3வது முறையாக இணைந்த படம் துணிவு. கடந்த 11 ஆம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்களின் ஆதரவால் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்தப் படம் அமைந்துள்ளாதாக விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

இந்தப் படத்தில் அஜித்துடன் சமுத்திரக்கனி, மஞ்சு வாரியர், வீரா, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு மங்காத்தா அஜித்தை திரையில் பார்த்துவிட்டதாக ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். துணிவு படம் இதுவரை உலக அளவில் ரூ.200 கோடிக்கும் அதிமாக வசூலித்துள்ளதாக கூறப்படும் நிலையில் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி ஒன்று விவாத நிகழ்ச்சியில் அஜித்தின் துணிவு படம் குறித்து ஆச்சரியமாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது. அதில், பிரான்ஸின் முக்கிய நகரங்களில் நடிகர் அஜித் குமாருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதாகவும் பிரெஞ்ச் படங்களை துணிவு படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் பாரிஸில் இவ்வளவு நாட்கள் படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடுவது பெரிய விஷயம் எனவும் அந்த நிகழ்ச்சியில் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அஜித் ரசிகர்கள் உற்சாகமாக பகிர்ந்துவருகிறார்கள். துணிவு படம் வெளியாகும் முன் நல்ல படங்களுக்கு விளம்பரம் தேவையில்லை என்ற அஜித்தின் கருத்து சர்ச்சையானது. வழக்கம்போல அஜித் துணிவு படத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும் அஜித் ரசிகர்களின் பேராதரவால் படம் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துவருகிறது.

First published:

Tags: Actor Ajith, Thunivu