ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இந்த வாரம் திரையரங்குகளை ஆக்கிரமித்த நாயகிகளின் படங்கள்!

இந்த வாரம் திரையரங்குகளை ஆக்கிரமித்த நாயகிகளின் படங்கள்!

த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், கோவை சரளா

த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், கோவை சரளா

ஒரே வாரத்தில் நாயகிகளை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட நான்கு திரைப்படங்கள் வெளியாகின்றன. 

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சினிமாவில் நாயகர்களை ஹீரோவாகக் கொண்ட படங்கள்தான் அதிக அளவில் வெளியாகி கொண்டிருந்தன.  சமீபகாலமாக நாயகிகளை மையமாகக் கொண்ட கதைகள் அதிகம் வெளிவர தொடங்கியுள்ளன.  அதில் நயன்தாரா, திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் தங்களுக்கு முக்கியத்துவம் தரும்  திரைப்படங்களை தேர்வு செய்து நடிக்கின்றனர்.

நாயகர்களின்  திரைப்படங்களை விரும்பி திரையிட்ட திரையரங்கு உரிமையாளர்கள்,  தற்போது நாயகிகளின் திரைப்படங்களையும் விரும்பி வெளியிடுகின்றனர்.  அந்த அளவிற்கு அவர்களுக்கு என்ற மார்க்கெட் உருவாகியுள்ளது. இந்த நிலையில்தான் நாயகிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 4 திரைப்படங்கள் இந்த வாரம் வெளியாகின்றன.

அதில் திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ராங்கி திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது. அந்தப் படத்தை எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் இயக்கியுள்ளார். இதில் த்ரிஷா இணையதள செய்தியாளராக நடித்திருக்கிறார். அதிலும் ஆக்‌ஷன் பார்முலாவில் எடுத்துள்ளனர்.

ராங்கியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'டிரைவர் ஜமுனா' வெளியாகிறது. இதில் வாடகை கார் ஓட்டும் பெண் ஓட்டுநராக ஐஸ்வர்யா நடித்துள்ளார். அவருடைய காரில் ஒரு கொலை கும்பல் ஏறுகின்றனர். அதற்கு பின் நடக்கும் சம்பவங்களை த்ரில்லர் பார்முலாவில் கூறியுள்ளனர்.

திரிஷா, ஐஸ்வர்யா படங்களுடன் கோவை சரளாவை முன்னிலை படுத்தி எடுக்கப்பட்டுள்ள 'செம்பி' படத்தை வெளியிடுகின்றனர். அதை பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இயக்கியுள்ளார். தன்னுடைய வழக்கமான படங்களை போல மலை மலை சார்ந்த மனிதர்களின் வாழ்வியலையே இதிலும் படமாக்கியுள்ளார் என கூறப்படுகிறது.

தமிழ் நடிகைகளின் படங்கள் போலவே, பாலிவுட் நடிகை சன்னி லியோனி நடித்திள்ள Oh My Ghost என்ற தமிழ்படமும் வெளியாகிறது. ராணியாக வாழ்ந்த ஒரு பெண்ணின் பேயை மையப்படுத்தி எடுத்துள்ளனர். அதை நகைச்சுவையாக எடுக்க முயற்சித்துள்ளனர்.

Also read... மீண்டும் தள்ளிப்போகும் அருண் விஜயின் 'பார்டர்' திரைப்படத்தின் ரிலீஸ்!

இந்த நான்கு திரைப்படங்களும் இந்த வாரம் வெளியாகும் நிலையில், எந்த படம் வெற்றி அடையும் என்று எதிர்பார்ப்பும் உள்ளது.  நாயகர்களை மையமாகக் கொண்ட திரையுரையில் நாயகிகளும் தற்போது வளர்ந்து வருவது நல்ல விஷயம் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actress Aishwarya Rajesh, Actress Trisha, Kovai Sarala