Home /News /entertainment /

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பயோ-பிக் திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகிறது…

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பயோ-பிக் திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகிறது…

முன்னாள் பிரதமர் வாஜ்பாயி

முன்னாள் பிரதமர் வாஜ்பாயி

Vajpayee BioPic : பாஜகவின் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை வாஜ்பாய்க்கு உண்டு. 2015-ல் அவருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டது.

    முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாற்றை கூறும் திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த வாஜ்பாய் கடந்த 1998 முதல் 2004 வரையில் அமைந்த பாஜ தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் பிரதமராக பொறுப்பு வகித்தார்.

    பாஜகவின் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை வாஜ்பாய்க்கு உண்டு. 2015-ல் அவருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டது.

    சிறந்த நாடாளுமன்றவாதி உள்பட பல்வேறு விருதுகளை வாஜ்பாய் பெற்றுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்து வாஜ்பாய் ஒதுங்கியிருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2018 ஆகஸ்ட் 16-ம்தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.

    Also read... ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் நடிகர் சூர்யா தேர்வு 

    தற்போது வாஜ்பாயின் பயோ பிக் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தியில் உருவாக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்திற்கு, ‘மெய்ன் ரஹுன் யா நா ரஹுன், யே தேஷ் ரெஹ்னா சாயியே - அடல்’ என்று பெயர் வைத்துள்ளார்கள்.



    இதில் அடல் – Atal என்ற எழுத்து மட்டும் பெரிதாக வைக்கப்பட்டு போஸ்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தை சந்தீப் சிங், வினோத் பனுசாலி ஆகியோர் தயாரித்துள்ளார்கள்.

    படத்தின் ரிலீஸ் குறித்து கூறியுள்ள சந்தீப் சிங் அடல் படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக மோஷன் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

    சந்தீப் சிங் மேலும் கூறுகையில், ‘இந்தியாவின் மிகச்சிறந்த தலைவர்களில் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களும் ஒருவர் ஆவார். இந்தியாவை அவர் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றார்.

    Also read... நகைச்சுவை நடிகர் வெங்கல்ராவ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி 

    அவரைப் பற்றி நாட்டின் அனைத்து மக்களும் அறிந்து கொள்ள வேண்டும். இதற்கு சினிமாதான் சரியான ஊடகமாக அமையும். வாஜ்பாயின் அரசியல் வாழ்க்கை மட்டுமல்லாமல் அவரது தனிப்பட்ட, கலை வாழ்க்கை உள்ளிட்டவை பற்றியும் இந்த சினிமா பேசும்’ என்று தெரிவித்துள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: AB Vajpayee

    அடுத்த செய்தி