பிகில் படத்தில் விஜய்க்கு தந்தையாக நடித்த பிரபல கால்பந்துவீரர்!

விஷாலுடன் திமிரு படத்திலும் கொம்பன், கணேசா மீண்டும் சந்திப்போம், கெத்து உள்ளிட்ட படங்களிலும் விஜயன் நடித்துள்ளார்.

news18
Updated: July 11, 2019, 2:01 PM IST
பிகில் படத்தில் விஜய்க்கு தந்தையாக நடித்த பிரபல கால்பந்துவீரர்!
பிகில் படத்தின் போஸ்டர்
news18
Updated: July 11, 2019, 2:01 PM IST
பிகில் படத்தில் இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் ஒருவர் விஜய்க்கு தந்தையாக நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் காலபந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்தப் படம் தொடர்பான அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் பிகில் படத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிகர் விஜய் வெறித்தனம் என்ற பாடலை பாடியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.தற்போது கிடைத்த தகவலின்படி, பிகில் படத்தில் விஜயின் தந்தை கதாபாத்திரத்தில் முன்னாள் இந்திய கால்பந்து வீரர் விஜயன் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஏற்கெனவே விஷாலுடன் திமிரு படத்திலும் கொம்பன், கணேசா மீண்டும் சந்திப்போம், கெத்து உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

2003-ம் ஆண்டு அர்ஜூனா விருது பெற்றிருக்கும் இவர், கால்பந்து போட்டிகளில் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.  கேரளா மாநிலம் திரிச்சூரைச் சேர்ந்த இவரது இயற்பெயர் இனிவளப்பில் மணி விஜயன் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

வீடியோ பார்க்க: பெண் அடிமைத்தனத்தை ஊக்குவித்த ஹீரோக்கள்!

First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...