ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Sourav Ganguly: சச்சின், தோனியை தொடர்ந்து படமாகும் கங்குலியின் வாழ்க்கை வரலாறு - ஹீரோ யார் தெரியுமா?

Sourav Ganguly: சச்சின், தோனியை தொடர்ந்து படமாகும் கங்குலியின் வாழ்க்கை வரலாறு - ஹீரோ யார் தெரியுமா?

கங்குலி

கங்குலி

இந்த படம் சவுரவ் கங்குலியின் முழு வாழ்க்கை பயணத்தையும் கொண்டிருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி மற்றும் முகமது அசாருதீன் ஆகியோருக்குப் பிறகு முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது.

  முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தற்போதைய தலைவருமான கங்குலி தற்போது இதற்கு ‘எஸ்’ சொல்லியுள்ளார். 200 முதல் 250 கோடி ரூபாய் முதலீட்டில் பெரிய பட்ஜெட் படமாக இது உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கங்குலியின் வாழ்க்கை வரலாற்றில், பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று யூகிக்கப்படுகிறது.

  நியூஸ் 18 பங்களாவுக்கு கங்குலி அளித்த பேட்டியில், இந்த செய்தியை உறுதிப்படுத்தினார். "ஆம், நான் சுயசரிதைக்கு ஒப்புக் கொண்டேன். இது இந்தியில் இருக்கும், ஆனால் இப்போது இயக்குனரின் பெயரை வெளியிட முடியாது. எல்லாம் இறுதி செய்ய இன்னும் சிறிது நேரம் ஆகும்" என்றார்.

  வெளியான செய்திகளின் படி, படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதப்பட்டு வருகிறது. தயாரிப்பு நிறுவனம் சவுரவ் கங்குலியை சில முறை சந்தித்துள்ளது. கங்குலியை திரையில் சித்தரிக்கும் நடிகரைப் பற்றியும் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த பாத்திரத்திற்கான சிறந்த நபராக ரன்பீர் கபூர் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் இரண்டு நடிகர்கள் பரிசீலனையில் இருக்கிறார்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  முன்னதாக, சவுரவ் கங்குலியை திரையில் சித்தரிக்க, ரித்திக் ரோஷன் சிறந்த தேர்வாக இருப்பார் என்று நேஹா துபியா பரிந்துரைத்தபோது, "ஆனால் முதலில் அதற்கு அவர் என்னைப் போன்ற உடலைப் பெற வேண்டும், ரித்திக்கின் உடல் எப்படி இருக்கிறது பாருங்கள் என்று நிறைய பேர் சொல்வார்கள், அவர் எவ்வளவு அழகாக இருக்கிறார், ’நீங்கள் ரித்திக் போன்ற ஒரு உடலைப் பெற வேண்டும்' என மக்கள் கூறுவார்கள். ஆனால், என் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க என்னைப் போன்ற ஒரு உடலை அவர் பெற வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார் கங்குலி.

  படத்தின் ஸ்கிரிப்ட் எழுதப்பட்டு வரும் நிலையில், இந்த படம் சவுரவ் கங்குலியின் முழு பயணத்தையும் கொண்டிருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. ஒரு இளம் கிரிக்கெட் வீரராக இருந்ததிலிருந்து, இந்திய அணியின் கேப்டனாக ஆனது, லார்ட்ஸில் அவர் பெற்ற வரலாற்று வெற்றி, இறுதியாக பி.சி.சி.ஐ.யின் தலைவரானது வரை, இந்த படம் சவுரவ் கங்குலியின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கும் என்று கூறப்படுகிறது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Sourav Ganguly