அதிக வருவாய் ஈட்டிய சினிமா பிரபலங்கள்... டாப் இடத்தில் யார் யார்?

2018-ம் ஆண்டுக்கான நூறு பேர் கொண்ட பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த பட்டியலில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார்.

Web Desk | news18
Updated: December 6, 2018, 7:36 AM IST
அதிக வருவாய் ஈட்டிய சினிமா பிரபலங்கள்... டாப் இடத்தில் யார் யார்?
ஏ.ஆர் ரஹ்மான், ரஜினிகாந்த், விஜய்
Web Desk | news18
Updated: December 6, 2018, 7:36 AM IST
இந்தியாவில் அதிகம் வருவாய் ஈட்டும் பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டு வரும் போர்ப்ஸ், இந்த ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் பல ஹீரோக்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. 2018-ம் ஆண்டுக்கான நூறு பேர் கொண்ட பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த பட்டியலில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார்.

சல்மான் கான் இந்த ஆண்டில் மட்டும் ரூ.253.35 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். அக்‌ஷய் குமார் ரூ.185 கோடிகளுடன் இரண்டாம் இடமும், சமீபத்தில் திருமணம் ஆன தீபிகா படுகோனே ரூ.112 கோடிகளுடன் நான்காம் இடத்திலும் உள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். சல்மான் கான் இந்த ஆண்டில் ரூ.253.35 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் (ரூ.66.75 கோடியுடன்) 11-வது இடத்தை பிடித்துள்ளார்.

விஜய் சேதுபதி


தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினிகாந்த் (ரூ.50 கோடி) 14-வது இடத்தையும், விஜய் (ரூ.30.33 கோடி) 26-வது இடத்திலும், விக்ரம் (ரூ.26 கோடி) 29-வது இடத்திலும் உள்ளனர். சூர்யா (ரூ.23.67 கோடி) மற்றும் விஜய் சேதுபதி (ரூ.23.67 கோடி) இருவரும் 34-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

தனுஷ் (ரூ.17.65 கோடி) 53-வது இடத்திலும், கமல்ஹாசன் (ரூ.14.2 கோடி) 71-வது இடத்தையும் பிடித்துள்ளனர். நாயகிகளில் டாப்ஸி 15.48 கோடி வருவாய் உடன் 67-ம் இடத்திலும், 15.17 கோடி வருவாய் உடன் நயன்தாரா 69-ம் இடத்திலும் உள்ளனர்.
Loading...
Also See.. திரைப்படங்களை வெற்றியடையச் செய்ய ரஜினிகாந்த் கையாண்ட விதம்

First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...