அப்பாவும் நானும் இணைந்து இசையமைக்கிறோம் - சூப்பர் அப்டேட் தந்த யுவன் சங்கர் ராஜா

news18
Updated: September 14, 2019, 1:50 PM IST
அப்பாவும் நானும் இணைந்து இசையமைக்கிறோம் - சூப்பர் அப்டேட் தந்த யுவன் சங்கர் ராஜா
விஜய் சேதுபதி மற்றும் யுவன் சங்கர் ராஜா
news18
Updated: September 14, 2019, 1:50 PM IST
முதன் முறையாக நானும் அப்பாவும் இணைந்து பணியாற்றுகிறோம் என்று யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம்பொருள் ஏவல் ஆகிய படங்களைத் தொடர்ந்து சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் மாமனிதன்.

இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தில் இயக்குநர் வ.கவுதமனின் மகன் தமிழ் அழகன் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதாக இயக்குநர் சீனு ராமசாமி தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு, வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார்.


இந்தப் படத்தில் காயத்ரி, லலிதா, குருசோமசுந்தரம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர்.

இதுகுறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘முதன் முறையாக நானும் அப்பாவும் இணைந்து பணியாற்றுகிறோம். மாமனிதன் படத்தின் இசை, இசைப்பிரியர்களுக்கு விருந்தாக இருக்கும்’ என்று பதிவிட்டுள்ளார்ALSO WATCH

First published: September 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...