முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 35 ஆண்டுகால திரைப் பயணத்தில் முதன்முறையாக இந்த கேரக்டரில் நடிக்கும் வடிவேலு…

35 ஆண்டுகால திரைப் பயணத்தில் முதன்முறையாக இந்த கேரக்டரில் நடிக்கும் வடிவேலு…

நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு

Vadivelu Mamannan : சந்திரமுகி முதல் பாகத்தில் வடிவேலுவின் காமெடி நன்றாக வரவேற்பை பெற்ற நிலையில் அதன் அடுத்த பாகத்திலும் இடம்பெற்றுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தனது 35 ஆண்டுகால திரைப்பயணத்தில் நடிகர் வடிவேலு முதன்முறையாக ஒரு கேரக்டரில் நடிக்கிறார். அதுகுறித்த சுவாரசிய தகவல் வெளிவந்துள்ளது.

நடிகர் வடிவேலு கடந்த 1988-ம் ஆண்டிலிருந்து சினிமாத் துறையில் இருந்து வருகிறார். கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 1991-ம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்த என் ராசாவின் மனசிலே திரைப்படம் வடிவேலுவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

இதன்பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இவரது காமெடிக்காகவே ஓடிய படங்கள் பல உள்ளன. மீம்ஸ் உலகின் மன்னனாக வலம் வரும் வடிவேலு, கடந்த சில ஆண்டுகளாக நடிப்புக்கு ஓய்வு கொடுத்திருந்தார்.

மும்பையில் நடந்த The Gray Man நிகழ்ச்சி.. வேஷ்டி சட்டையுடன் மாஸாக என்ட்ரி கொடுத்த தனுஷ்!

இந்நிலையில் தற்போது ரீ என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு உதயநிதி ஹீரோவாக நடிக்கும் மாமன்னன், லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் முதன் முறையாக ஹீரோவுக்கு அப்பா என்ற கேரக்டரில் மாமன்னன் படத்தில் வடிவேலு இடம்பெற்றிருக்கிறார். இந்த படத்தை கர்ணன், பரியேறும் பெருமாள் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மாமன்னன் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

சந்திரமுகி முதல் பாகத்தில் வடிவேலுவின் காமெடி நன்றாக வரவேற்பை பெற்ற நிலையில் அதன் அடுத்த பாகத்திலும் இடம்பெற்றுள்ளார். இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இயக்க, பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். படங்களுக்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்கிறார்.

சந்திரமுகி 2 படத்தை லைகா புரொடெக்சன்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

First published:

Tags: Actor Vadivelu