முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஜய்ணா லவ் யூ... தெறி நினைவுகளுடன் அட்லீ நெகிழ்ச்சி

விஜய்ணா லவ் யூ... தெறி நினைவுகளுடன் அட்லீ நெகிழ்ச்சி

விஜய் உடன் அட்லீ

விஜய் உடன் அட்லீ

விஜய்யின் ‘தெறி’ படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இயக்குநர் அட்லீ படம் குறித்த சில நினைவுகளை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

தாணு தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய், மகேந்திரன், சமந்தா, ஏமி ஜாக்‌ஷன் உள்ளிட பலர் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியான படம் ‘தெறி’. இந்தப் படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றதால் அடுத்தடுத்து மெர்சல், பிகில் உள்ளிட்ட விஜய்யின் படங்களை இயக்கும் வாய்ப்பு அட்லீக்கு அமைந்தது.

தெறி திரைப்படம் வெளியாகி நேற்றுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்தன. இந்நிலையில் இதுகுறித்து ட்வீட் செய்திருக்கும் இயக்குநர் அட்லீ, விஜய்ணா லவ்யூ. கலைப்புலி தாணுவுக்கு நன்றி. உங்கள் ஆதரவில்லாமல் இந்தப்படம் சாத்தியப்பட்டிருக்காது. அந்தப் பயணத்தை ரசித்தேன். உங்கள் அர்ப்பணிப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி சமந்தா. தெறி படத்துக்கு மீனாவின் ஆதரவை மறக்கவே முடியாது. மகேந்திரன், ஜெகதீஷ், உள்ளிட்டோரது ஆதரவுக்கு நன்றி.

‘தெறி’ படத்தை மறக்க முடியாத படமாக மாற்றியமைத்த இயக்குநர் மகேந்திரனுக்கு நன்றி. உங்கள் இழப்பை உணர்கிறோம். நிறைய உங்களிடம் கற்றுக் கொண்டேன். பின்னணி இசை மற்றும் சிறந்த பாடல்களைக் கொடுத்த ஜி.வி.பிரகாஷூக்கு நன்றி. தெறியின் தூண்களில் ஜி.வி.யும் ஒருவர்.

பாரிஸ் கார்னர் அரங்கம் அமைத்து தந்த முத்துராஜூக்கு நன்றி. எடிட்டர் ஆண்டனி ரூபனுக்கு நன்றி. எனக்கு உன்னைவிட்டால் வேறு ஆள் கிடையாது. உன்னுடனான பயணம் அற்புதமானது” இவ்வாறு படத்தில் பணியாற்றிய அனைவரையும் குறிப்பிட்டு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறியுள்ளார் அட்லீ.

பிகில் படத்தை அடுத்து ஷாருக்கான் நடிக்கும் படத்தை அட்லீ இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அட்லீ இன்னும் இத்தகவலை உறுதிப்படுத்தவில்லை.

First published:

Tags: Actor vijay, Director Atlee, Kollywood