விஸ்வாசம் படத்தை ஏன் பார்க்க வேண்டும்? 5 முக்கிய காரணங்கள்!

விஸ்வாசம் படத்தில் விவசாயம் தொடர்பான கருத்துகளை அஜித் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. இதுவே படத்துக்கான பாசிடிவ் கருத்தாக மாறியுள்ளது.

news18
Updated: January 9, 2019, 5:39 PM IST
விஸ்வாசம் படத்தை ஏன் பார்க்க வேண்டும்? 5 முக்கிய காரணங்கள்!
விஸ்வாசத்தில் அஜித்!
news18
Updated: January 9, 2019, 5:39 PM IST
பொங்கல் திருவிழாவையொட்டி அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் பேட்ட ஆகிய 2 படங்கள் ஒரே நாளில் திரைக்கு வருகின்றன. விவேகம் படம் வெளியாகி ஒன்றரை வருடத்துக்குப் பின் விஸ்வாசம் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

விஸ்வாசம் படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்:

படத்தின் ரன்னிங் டைம்

இந்தப் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 32 நிமிடங்கள். முதல் பாதி 1 மணி நேரம் 16 நிமிடங்கள், இரண்டாவது பாதி 1 மணி நேரம் 16 நிமிடங்கள். பேட்ட படத்தின் ரன்னிங் டைம்-உடன் ஒப்பிடுகையில் 20 நிமிடங்கள் குறைவான கால அளவைக் கொண்டுள்ளது. இது படத்துக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்துள்ளது.

படத்தில் நடித்துள்ள நடிகர்கள்:

இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட காமெடி பட்டாளமே நடித்துள்ளது. இதனால் ஒரு பக்கம் அஜித்துக்கான மாஸான படமாகவும், மறுபக்கம் காமெடி ட்ரீட்டாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...
டி.இமான் இசை:

டி.இமான் இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதேபோல் படத்தின் பின்னணி இசையிலும் அஜித்துக்காக சிறப்பான இசையை வெளிப்படுத்தியுள்ளதாக இமான் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதனால் படத்தை திரையில் காண்பதற்காக ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அஜித்துக்கான மாஸ் பின்னணி இசையை காணவே திரையரங்குக்கு செல்லலாம்.சிறுத்தை சிவா இயக்கம்:

இயக்குநர் சிவா - அஜித்துடன் நான்காவது முறையாக கூட்டணி அமைத்திருக்கும் படம் விஸ்வாசம். வீரம் படத்தில் படம் முழுவதும் அஜித்தை வேட்டி கட்டி நடிக்க வைத்த சிவா, குடும்ப கதையை அஜித்துக்கு கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்தார். ஒரு இயக்குநருக்கு அடுத்தடுத்து படங்களை கொடுத்திருக்கும் அஜித்துக்கு விஸ்வாசமான படமாக இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் பேசியிருக்கும் மாஸ் வசனங்களும் படத்தில் இடம்பெற்றிருப்பதாக இயக்குநர் கூறியுள்ளார். படத்துக்கு தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் கிடைத்திருப்பதால் குடும்பங்கள் கொண்டாடும் படமாக விஸ்வாசம் அமையும்.அஜித்:

விஸ்வாசம் படத்துடன் வெளியாகும் பேட்ட படத்தில் நடிகர் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. விஸ்வாசம் படத்தில் தனி ஆளாக அஜித் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். பொங்கல் விடுமுறை நாட்களில் படம் வெளியாவதால் வசூலில் புதிய சாதனை படைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் இந்தப் படத்தில் விவசாயம் தொடர்பான கருத்துகளை பேசியிருப்பதாக கூறப்படுகிறது. இதுவே படத்துக்கான பாசிடிவ் கருத்தாக மாறியுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

விஸ்வாசம் படத்திற்கான தடை நீங்கியது! அடிச்சுத் தூக்கும் தல ரசிகர்கள் - வீடியோ

First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...