’பேட்ட’ படத்தை ஏன் பார்க்க வேண்டும்? முக்கிய காரணங்கள்!

நாளை ரிலீசாகும் பேட்ட படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்பதற்கான முக்கிய காரணங்கள்.

news18
Updated: January 9, 2019, 6:25 PM IST
’பேட்ட’ படத்தை ஏன் பார்க்க வேண்டும்? முக்கிய காரணங்கள்!
ரஜினிகாந்த்
news18
Updated: January 9, 2019, 6:25 PM IST
கார்த்திக் சுப்புராஜ் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பேட்ட. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் சிம்ரன், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படம் நாளை ரிலீசாக இருக்கிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இந்தப் படத்தைப் பார்ப்பதற்கான 5 முக்கிய காரணங்களைப் பார்ப்போம்.

ரஜினிகாந்த் எனும் பிராண்ட்:

தமிழகத்தில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது பெயர் டைட்டில் கார்டில் வரும்போதே விசில் சத்தம் விண்ணைப் பிளக்கும். கடந்த 40 ஆண்டுகளாக தனித்துவமான ஸ்டைலால் ரசிகர்களை கவர்ந்திருக்கும் இவரின் திரைமேஜிக் படத்தின் பிளஸ்ஸாக அமைந்திருக்கிறது.

Petta: Rajinikanth

கார்த்திக் சுப்புராஜ் - கிளைமாக்ஸ் சஸ்பென்ஸ்

குறும்படங்கள் மூலம் அறிமுகமாகி கதை சொல்லுவதில் தனக்கான தனி முத்திரையை தமிழ் சினிமாவில் பதித்தவர் கார்த்திக் சுப்புராஜ். ரஜினியின் படத்தை அவரது தீவிர ரசிகரே இயக்கியிருப்பது படத்துக்கு கூடுதல் வலுவாக அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் 90-களில் பார்த்த ரஜினிகாந்தை மீண்டும் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர். ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியும் படத்தை பார்க்கத் தூண்டும் காரணிகளாக அமைந்துள்ளன. அதேபோல் கார்த்திக் சுப்பாராஜின் படங்களில் ஹாலிவுட் படங்களைப்போல டுவிஸ்ட், சஸ்பென்சுக்கு பஞ்சம் இருக்காது.
Loading...


நட்சத்திர பட்டாளம்:

வில்லனாக விஜய் சேதுபதி, இஸ்லாமிய கதாபாத்திரத்தில் சசிகுமார், த்ரிஷா, சிம்ரன் என்ற இரு முன்னணி நாயகிகள், பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருப்பதால், இந்த பெரும் நட்சத்திர பட்டாளத்தின் நடிப்பை கண்டுகளிப்பதும் படத்தை பார்ப்பதற்கான முக்கிய காரணம்.விஜய் சேதுபதி:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பேட்ட படத்தில் முதன்முறையாக சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக ஜித்து என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி திரையில் நடத்த இருக்கும் மேஜிக்கும் படத்தை காண்பதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Music Director Aniruth

அனிருத் இசை:

சென்னை மண்ணின் இசையை மையப்படுத்தி அதற்கான வார்த்தைகளை அமைத்து வெளியான மரண மாஸ் உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்துள்ளன. இளைஞர்களின் வரவேற்பைப் பெற்ற அனிருத்தின் இசையும் படத்துக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. இதனால் இந்தப் படம் இளைஞர்கள் உட்பட அனைவருக்கும் விருந்தாக அமையும்.

பேட்ட VS விஸ்வாசம்... ரிலீஸுக்கு முன்னரே லாபத்தை ஈட்டும் திரைப்படம் - வீடியோ

First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...