முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / WATCH: வெளியானது இளையராஜா இசையில் தனுஷ் பாடிய பாடல்.. விடுதலை அப்டேட்..!

WATCH: வெளியானது இளையராஜா இசையில் தனுஷ் பாடிய பாடல்.. விடுதலை அப்டேட்..!

ஒன்னோடு நடந்தா

ஒன்னோடு நடந்தா

விடுதலை படத்திற்காக இளையராஜா இசையில் தனுஷ் பாடியுள்ள 'ஒன்னோடு நடந்தா' பாடல் வெளியாகி உள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன், நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து விடுதலை  திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. அதில் முதல் பாகம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

வெற்றிமாறன் தன்னுடைய திரைப்படங்களுக்கு வழக்கமாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷூடன் கூட்டணி அமைப்பார். ஆனால், விடுதலை திரைப்படத்திற்காக முதன் முறையாக இளையராஜாவுடன் கைகோர்த்துள்ளார். அவருடைய இசையில் 'ஒன்னோடு நடந்தா' என்ற பாடல் உருவாகி உள்ளது. அந்தப் பாடலை தனுஷ் மற்றும் அநன்யா பஃட் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

இந்தப் பாடல் வெளியீடு குறித்து இரண்டு ப்ரமோ வீடியோக்களை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதில் இளையராஜா பாடகர் தனுஷுக்கு ராகம் சொல்லிக் கொடுக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அது சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் இளையராஜா இசையில் தனுஷ் எப்படி அந்தப் பாடலை பாடியிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.

இந்த நிலையில் விடுதலை படத்தில் இடம்பெறும் 'ஒன்னோடு நடந்தா' பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இளையராஜா இசையில் தனுஷ் பாடியிருப்பது அவரின் வழக்கமான ஸ்டைலில் இல்லை என்றாலும், இந்தப் பாடலுக்கு என்ன தேவையோ, அதை இளையராஜாவிடம் கேட்டு தெரிந்து கொண்டு பாடி கொடுத்துள்ளார். அது சிறப்பாகவே அமைந்திருக்கிறது.

இந்தப் பாடல் சூரிக்கும் அவருடைய காதலிக்கும் வரும் பாடலாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் சுகா எழுதிய வரிகள் இளையராஜாவின் இசையுடன் சேர்ந்து ரம்மியமாகியுள்ளன.

' isDesktop="true" id="887344" youtubeid="-wG_wCQFjY4" category="cinema">

நன்றி: Sony Music South.

First published:

Tags: Actor Dhanush, Director vetrimaran, Ilaiyaraja, Lyrical Video Songs