Home /News /entertainment /

இளையராஜா இசையில் உருவாகியிருக்கும் மாயோன்!

இளையராஜா இசையில் உருவாகியிருக்கும் மாயோன்!

மாயோன்

மாயோன்

மாயேனில் சிபி ஆர்க்கியாலஜிஸ்டாக நடித்துள்ளார். அவருடன் தான்யா, பகவதி பெருமாள், ஹரிஷ் பெராடி, கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இளையராஜா இசையில் உருவாகியிருக்கும் பேண்டஸி த்ரில்லர் திரைப்படம் மாயோன். இதன் டைட்டில் பாடலை வரும் 10 ஆம் தேதி வெளியிடுகின்றனர்.

கிஷோர் என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் உருவான திரைப்படம் மாயோன். படத்தின் கதை, திரைக்கதையும் அவரே. படம் எடுத்து முடித்த பின் வெளியிட முடியாமல் போஸ்ட் புரொடக்ஷனில் இருந்த நிலையில், அதனை டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் வாங்கியது. பேட்ச் வொர்க் என்ற பெயரில் பல காட்சிகளை மறுபடி எடுத்து படத்துடன் இணைத்தனர்.

இப்போது படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தின் கதை, திரைக்கதை இயக்குனருடையது என்றாலும் பணம் போட்டவர் என்ற முறையில் டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் அருண் மொழி மாணிக்கம் திரைக்கதை என தனது பெயரை போட்டுக் கொண்டுள்ளார். படத்தின் டைட்டில் ட்ராக் வெளியீடு குறித்த போஸ்டரில் கூட தயாரிப்பாளர் பெயரும், இளையராஜா பெயரும் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இயக்குனர் பெயர் இல்லை.

மாயேனில் சிபி ஆர்க்கியாலஜிஸ்டாக நடித்துள்ளார். அவருடன் தான்யா, பகவதி பெருமாள், ஹரிஷ் பெராடி, கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி ஆகியோரும் நடித்துள்ளனர். 5000 வருடங்கள் பழமையான அமானுஷ்யங்கள் நிறைந்த கோவிலைச் சுற்றி இந்தக் கதை புனையப்பட்டுள்ளது.

படத்துக்கு இப்போதே புரமோஷன் வேலைகள் நடந்து வருகின்றன. பிரமாண்ட விஷ்ணு சிலையின் பேனரை திரையரங்குகளில் வைத்துள்ளனர். இளையராஜா இசையில் முதல் பாடல் 10-ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் டைட்டிலிலாவது இயக்குனருக்குரிய இடத்தை தயாரிப்பாளர் தருவார் என நம்புவோம்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Ilayaraja

அடுத்த செய்தி