முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சந்திரமுகி 2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

சந்திரமுகி 2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

ராகவா லாரன்ஸ் - பி.வாசு

ராகவா லாரன்ஸ் - பி.வாசு

சந்திரமுகி 2 படத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சந்திரமுகி 2 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மைசூரில் நிறைவடைந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. இதனை இயக்குநர் பி.வாசு இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான சந்திரமுகி 2-வில், ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு முக்கிய வேடங்களில் நடிப்பதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு சந்திரமுகி 2-வின் பூஜை நடைப்பெற்றது. அதில் இயக்குநர் பி.வாசு, ராகவா லாரன்ஸ், வடிவேலு, ரவி மரியா, ராதிகா சரத்குமார் மற்றும் சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் அனைவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அதோடு சந்திரமுகி 2 படத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

கமல் ஹாசனின் இந்தியன் 2-வில் நவரச நாயகன் கார்த்திக்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பூஜையை தொடர்ந்து படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடைப்பெற்று வந்தது. தற்போது அது நிறைவடைந்துள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார்.

First published:

Tags: Actor Raghava lawrence, Chandramukhi