• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஹரி, அருண் விஜய் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ஹரி, அருண் விஜய் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

அருண் விஜய்

அருண் விஜய்

ஆக்ஷன் சென்டிமெண்ட் கலந்து உருவாகும் இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்க, சக்தி வெங்கட் ஒளிப்பதிவு செய்கிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஹரி இயக்கத்தில் முதல்முறையாக அருண் விஜய் நாயகனாக நடித்து வருகிறார். ஏவி33 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை ஒன்பதாம் தேதி நாளை வெளியிடுகின்றனர்.

ஹரி மனைவியின் அண்ணன் அருண் விஜய். எனினும் அருண் விஜய்யை வைத்து இதுவரை எந்தப் படமும் ஹரி இயக்கியதில்லை. முதல்முறையாக இப்போது இணைந்திருக்கிறார்கள். ட்ரம் ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரிக்கிறது. பழனியில் இதன் படப்பிடிப்பை தொடங்கினர். கொரோனா இரண்டாம் அலையால் முதல்கட்ட படப்பிடிப்புடன் படம் முடங்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கொரோனா இரண்டாம் அலை தணிந்து ஊரடங்கு தளர்த்தப்பட்டதும், ராமேஸ்வரத்தில் ஹரி படப்பிடிப்பை தொடங்கினார். ராமேஸ்வரம், தூத்துக்குடி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. ப்ரியா பவானி சங்கர் படத்தின் நாயகி. ராதிகா சரத்குமார், யோகி பாபு, தலைவாசல் விஜய், போஸ் வெங்கட், ஜெயபாலன் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

Also read... சூர்யா படத்தை இயக்கும் இரு முன்னணி இயக்குனர்கள்...!

அருண் விஜய்யின் அண்ணன் வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்த பிரகாஷ்ராஜ் கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியாமல் போக, சமுத்திரகனி தற்போது அந்த வேடத்தில் நடித்து வருகிறார்

ஆக்ஷன் சென்டிமெண்ட் கலந்து உருவாகும் இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்க, சக்தி வெங்கட் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த வருடமே படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: