ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வித்யாசமான லுக்கில் கார்த்தி - வெளியானது ஜப்பான் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

வித்யாசமான லுக்கில் கார்த்தி - வெளியானது ஜப்பான் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஜப்பான் திரைப்படத்தின் முதல் பார்வை

ஜப்பான் திரைப்படத்தின் முதல் பார்வை

தமிழகத்தில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஜப்பான் திரைப்படம் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அது உண்மை சம்பவமாக இருந்தாலும், அதில் இன்று ஏராளமான மாற்றங்களை செய்து கதை எழுதியுள்ளார் ராஜூ முருகன்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கார்த்தி நடிக்கும் ஜப்பான் திரைப்படத்தின் முதல் பார்வையை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சர்தார் திரைப்படத்தை தொடர்ந்து தன்னுடைய 25ஆவது திரைப்படத்தில் கார்த்தி நடிக்கிறார். ஜப்பான் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்த படத்தை, ராஜூ முருகன் இயக்குகிறார். இதற்கான படப்பிடிப்பு கடந்த 12ஆம் தேதி ராமநாதபுரத்தில் தொடங்கியது.

மேலும் நாளை முதல் நடிகர் கார்த்தி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். தமிழகத்தில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஜப்பான் திரைப்படம் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அது உண்மை சம்பவமாக இருந்தாலும், அதில் இன்று ஏராளமான மாற்றங்களை செய்து கதை எழுதியுள்ளார் ராஜூ முருகன்.

ஜப்பான் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ராமநாதபுரத்தில் தொடங்கியுள்ள நிலையில், கொடைக்கானலில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்துகின்றனர். இந்த நிலையில் தற்போது படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர். அதில் கார்த்தியின் காட்சி இடம் பெற்றுள்ளது. மேலும் தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த முதல் பார்வையின் தோற்றம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஜப்பான் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க ரவிவர்மா ஒளிப்பதிவு செய்கிறார் அதேபோல் அனு இம்மானுவேல் நாயகியாக நடிக்கிறார். தெலுங்கில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, நாயகனாகவும் வெற்றி பெற்றவர் நடிகர் சுனில். கடந்த வருடம் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த 'புஷ்பா' படத்தில் ‘மங்களம் சீனு’ என்ற கதாபாத்திரத்தில் வில்லனாகவும் நடித்து மிரட்டியவர். 'ஜப்பான்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் சுனில்.

Also read... தனுஷ் ரசிகர்களுக்கு கேப்டன் மில்லர் படக்குழு அறிவித்த நியூ அப்டேட்!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க, ராஜு முருகன் இயக்கத்தில் 2016-ல் வெளிவந்து தமிழில் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்ற படம் 'ஜோக்கர்'. தற்போது மீண்டும் இதே கூட்டணி 'ஜப்பான்' மூலம் மீண்டும் இணைகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Karthi, Raju Murugan