முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விக்ரம் பட சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் வைரல்… ரசிகர்கள் உற்சாகம்

விக்ரம் பட சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் வைரல்… ரசிகர்கள் உற்சாகம்

விக்ரம் பட சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக்

விக்ரம் பட சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக்

Suriya in Vikram Movie : படக்குழுவினர் சஸ்பென்ஸை தக்க வைத்திருப்பதால் படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :

விக்ரம் படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர் சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

க்ளைமேக்ஸ் காட்சியின்போது சூர்யா படத்தில் இடம்பெறுவார் என்றும், இந்த காட்சி விக்ரம் படத்தின் அடுத்த பாகங்களுக்கு லீடாக அமையும் என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.

விக்ரம் படத்தில் சூர்யாவின் கேரக்டர் என்ன என்பது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அவர் கமலின் மகன் என்றும், கமலுடன் ட்ரெய்லரில் வரும் குழந்தை சூர்யாவின் மகன் என்றும் ரசிகர்கள் யூகித்துள்ளனர்.

படக்குழுவினர் சஸ்பென்ஸை தக்க வைத்திருப்பதால் படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதையும் படிங்க - தமிழ் சினிமாவின் ’ஆல் இன் ஆல் அழகு ராஜா’ கவுண்டமணி பிறந்த நாள் ஸ்பெஷல்!

இந்நிலையில் விக்ரம் படத்தில் சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி ரசிகர்களின் விருப்பத்தை பெற்று வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் சூர்யா, அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியமான துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க - ரிலீஸுக்கு முன்னரே கோடிகளை அள்ளிய விக்ரம்… வசூலில் புதிய உச்சம் தொடும் என எதிர்பார்ப்பு

இந்நிலையில் ஜூன் 3-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு சென்னை, ரோகினி திரையரங்கில் விக்ரம் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை கமல்ஹாசன் பார்க்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களுடன் FDFS ஷோ-வை பார்ப்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Actor Suriya