லலிதம் சுந்தரம் - தம்பிக்காக மஞ்சு வாரியர் தயாரிக்கும் படம்...!

மஞ்சு வாரியர் மற்றும் அவரது சகோதரர்

இந்தப் படத்தில் பிஜு மேனன், மஞ்சு வாரியருடன் தீப்தி, சைஜு குரூப், அனு மோகன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தனது தம்பிக்காக ஒரு படத்தை தயாரிக்கிறார் மஞ்சு வாரியர். நேற்று இதன் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

மலையாளத்தின் தனிப்பெரும் நாயகியாக இருந்த காலத்தில் நடிகர் திலீபை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மஞ்சு வாரியர். அதன் பிறகு நடிப்பிலிருந்து விலகினார். அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். திலீபுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு முறைப்படி பிரிந்தபின், ஹவ் ஓல்டு ஆர் யூ (36 வயதினிலே படத்தின் ஒரிஜினல்) படத்தின் மூலம் மீண்டும் நடிப்புக்கு திரும்பினார். தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மஞ்சு வாரியரின் தம்பி மது வாரியர். இவருக்காக மஞ்சு வாரியர் லலிதம் சுந்தரம் என்ற படத்தை தயாரிக்கிறார். மது வாரியர் இயக்கும் முதல் படம் இது. பிஜு மேனன் இதில் நாயகனாக நடிக்கிறார். மஞ்சு வாரியரும், பிஜு மேனனின் மனைவியும் முன்னாள் நடிகையுமான சம்யுக்த வர்மாவும் நெருங்கிய தோழிகள். நேற்று பிஜு மேனனின் பிறந்தநாளை முன்னிட்டு லலிதம் சுந்தரம் படத்தின் பர்ஸ்ட் லுக்கை மம்முட்டி, மோகன்லால், பிருத்விராஜ் ஆகியோர் வெளியிட்டனர்.



Also read... நாய் சேகர் கதைவிவாதத்தில் வடிவேலு, சுராஜ்...!

இந்தப் படத்தில் பிஜு மேனன், மஞ்சு வாரியருடன் தீப்தி, சைஜு குரூப், அனு மோகன் ஆகியோரும் நடிக்கின்றனர். மஞ்சு வாரியரின் மஞ்சு வாரியர் புரொடக்ஷன்ஸ் சென்சுரி ஃபிலிம்ஸுடன் இணைந்து படத்தை தயாரிக்கிறது.
Published by:Vinothini Aandisamy
First published: