முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வெளியானது நடிகர் பரத்தின் 'முன்னறிவான்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்

வெளியானது நடிகர் பரத்தின் 'முன்னறிவான்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்

பரத்

பரத்

இந்தப்படத்தில் கரு.பழனியப்பன், சிங்கம்புலி, சின்னி ஜெயந்த், மிர்ச்சி செந்தில், அசார், மகாலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகர் பரத் மற்றும் ஜனனி நடிக்கும் முன்னறிவான் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் பரத்திற்கு இந்த ஆண்டில் மட்டும் 5க்கும் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த குரூப் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

மலையாளத்தில் வெளியான இந்த படத்தில் இசாக் என்ற கேரக்டரில் பரத் நடித்திருப்பார். அதற்கு முன்பு தமிழில் வெளியான த்ரில்லர் திரைப்படமான காளிதாசும் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் நடிகர் பரத் மற்றும் ஜனனி இணைந்து நடிக்கும் சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படம் 'முன்னறிவான்'. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் விஜயராஜ் இயக்கியுள்ளார்.

எதிர்காலத்தில் நடப்பவற்றை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் திறன் ஒருவருக்கு இருந்தால் என்ன நடக்கும் என்பதை மையமாகக் கொண்டு முன்னறிவான் திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

Also read... நிறைவடைந்தது சுந்தர்.சி-யின் தலைநகரம் 2 படப்பிடிப்பு

மேலும் இந்தப்படத்தில் கரு.பழனியப்பன், சிங்கம்புலி, சின்னி ஜெயந்த், மிர்ச்சி செந்தில், அசார், மகாலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் முன்னறிவான் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இந்த போஸ்டரை நடிகர் ஆர்யா மற்றும் விஜய் ஆண்டனி தங்களுடைய சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor bharath, Janani