ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் ஃபர்ஹானா! ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் ஃபர்ஹானா! ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Farhana

Farhana

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படத்திற்கு ஃபர்ஹானா என தலைப்பு வைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் திரைப்படத்திற்கு ஃபர்ஹானா என பெயர் வைத்துள்ளனர்.

    ஒரு நாள் கூத்து,  மான்ஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்திருக்கிறார்.  இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து, இறுதி கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.  இருந்தாலும் படத்தின் தலைப்பு மற்றும் படத்தின் மற்ற செய்திகளை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தனர். இந்த நிலையில் தற்போது படத்திற்கு ஃபர்ஹானா என தலைப்பு வைத்திருப்பதாக அறிவித்திருக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த திரைப்படத்திற்கு கவிஞரும், எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன் வசனம் எழுதியுள்ளார்.  ஃபர்ஹானா திரைப்படத்தின் கதை முக்கிய விஷயத்தைப் பற்றி பேசுகிறது. அது சர்ச்சையை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

    இந்த திரைப்படத்தை நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் ஆலோசனை செய்து வருகிறது. அதில் முதல் கட்டமாக படத்தின் பாடலை 7-ம் தேதி வெளியிடுகின்றனர்.

    Published by:Murugadoss C
    First published: