விஜய் சேதுபதி நடிக்கும் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியீடு

விஜய் சேதுபதி நடிக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான 800 பலத்த எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. இதன் பர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாகிறது.

விஜய் சேதுபதி நடிக்கும் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியீடு
முத்தையா முரளிதரன் | விஜய் சேதுபதி
  • Share this:
33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 800 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. அதில் நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கும் இந்தப் படத்துக்கு ‘800’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை வீரரை மையப்படுத்திய படம் என்பதால் தமிழ் தேசிய தலைவர்கள் இப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விஜய் சேதுபதியை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குநர் சீனு ராமசாமியும் படத்திலிருந்து விலகுமாறு விஜய் சேதுபதிக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும் படிக்க..சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ உருவானது இப்படித்தான் - மேக்கிங் வீடியோஇந்த நிலையில் 800 படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டரை படக்குழு இன்று மாலை வெளியிடுகிறது. சர்வதேச போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் முத்தையா என்பதால் படத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது குன்றத்தூரில் நடைபெறும் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி மும்முரமாக நடித்து வருகிறார்.
First published: October 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading