• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • லைகர் படத்தின் தீபாவளி போஸ்டரில் மைக் டைசன்...!

லைகர் படத்தின் தீபாவளி போஸ்டரில் மைக் டைசன்...!

மைக் டைசன்

மைக் டைசன்

ஆக்ஷன் அடிதடி படங்களுக்கு பூரி ஜெகன்நாத் பெயர் போனவர். ஜுனியர் என்டிஆரை வைத்து இயவர் இயக்கிய டெம்பர் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றி பெற்றது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் லைகர் படத்தின் புதிய போஸ்டரில் மைக் டைசன் இடம்பெற்றுள்ளார்.

பூரி ஜெகன்நாத் விஜய் தேவரகொண்டா நடிப்பில் லைகர் என்ற படத்தை இயக்கி வருகிறார். Lion - Tiger இரண்டையும் இணைந்து லைகர் (Liger) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அனன்யா பாண்டே இதில் நாயகியாக நடிக்கிறார். விஜய் தேவரகொண்டா இதில் பாக்ஸராக நடிக்கிறார்

சமீபத்தில், லைகர் படத்தில் மைக் டைசன் முக்கிய வேடத்தில் நடிப்பதாக அறிவித்தனர். இதற்கு முன் ஹாலிவுட்டில் தயாரான ஹேங்ஓவர் திரைப்படத்தில் மைக் டைசன் மைக் டைசனாகவே நடித்திருந்தார். இந்திய சினிமா ஒன்றில் அவர் நடிப்பது இதுவே முதல்முறை. படத்தின் கிளைமாக்ஸில் விஜய் தேவரகொண்டாவும், மைக் டைசனும் மோதுவதாகவும், யுஎஸ்ஸில் இந்த சண்டைக் காட்சி எடுக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு மைக் டைசன் இடம்பெற்றுள்ள புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில் டைசன் தனது ட்ரேட் மார்க் ஆக்ரோஷத்துடன் இருக்கிறார். தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் பான் - இந்தியா திரைப்படமாக லைகர் உருவாகி வருகிறது.



லைகரை பூரி ஜெகன்நாத், சார்மி, கரண் ஜோஹர், அபூர்வா மேத்தா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே தவிர ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்

Also read... RC15  முதல்கட்ட படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்த ஷங்கர்!

ஆக்ஷன் அடிதடி படங்களுக்கு பூரி ஜெகன்நாத் பெயர் போனவர். ஜுனியர் என்டிஆரை வைத்து இயவர் இயக்கிய டெம்பர் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றி பெற்றது. தமிழில் விஷால் நடிப்பில் அயோக்யா என்ற பெயரில் வெளியானதும் அந்தப் படம்தான். லைகர் மைக் டைசனின் வருகையால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2022 முற்பகுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: