ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துணிவு vs வாரிசு... வெளியானது முதல் நாள் வசூல் விவரம் - யார் வின்னர் ?

துணிவு vs வாரிசு... வெளியானது முதல் நாள் வசூல் விவரம் - யார் வின்னர் ?

விஜய் - அஜித்

விஜய் - அஜித்

இரண்டு படங்களும் வழக்கம் போல தங்கள் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. பொங்கல் விடுமுறை ஒருவாரம் இருப்பதால் இரண்டு படங்களுக்குமே நல்ல வசூல் கிடைக்க வாய்ப்பிருக்கிறது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த சில மாதங்களாக வாரிசா துணிவா என ரசிகர்கள் மனதில் முட்டி மோதிக்கொண்டிருந்த கேள்விக்கு இன்று விடை கிடைத்திருக்கிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித் - விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியாகியிருக்கின்றன. எதிர்பார்த்தபடியே திரையரங்குகளில் இரு தரப்பு ரசிகர்களும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலுமே இரண்டு படங்களுக்கும் கலவையான விமர்சனங்களை கிடைத்திருக்கின்றன. அந்த வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியான ஜில்லா - வீரம் படங்களுக்கும் கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. இருப்பினும் இரண்டு படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்தது. அந்த நிலை தான் இந்த பொங்கலுக்கும் நடக்கும் என்று பெரும்பாலான சினிமா வர்த்தகர்களின் கணிப்பாக இருக்கிறது.

இருப்பினும் யாருடைய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நன்றாக இருக்கிறது, யாருடைய படத்தின் டிரெய்லருக்கு அதிக வியூஸ் கிடைத்திருக்கிறது என தொடங்கி முதல் நாள் வசூல், ஒட்டுமொத்த வசூல் என இரண்டு ரசிகர்களுக்கும் இடையில் போட்டி நீண்டு கொண்டே இருக்கும். அடுத்த இரண்டு வாரத்துக்கு இதுகுறித்த செய்திகள் தான் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் படங்களின் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்போவதில்லை.

இந்த நிலையில் தமிழ்நாடு அளவில் நடிகர் அஜித் குமாரின் துணிவு 21.60 கோடியும், விஜய்யின் வாரிசு ரூ.20.76 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக அஜித் படத்துக்கு எப்பொழுதும் முதல் நாளில் அதிக வசூல் கிடைக்கும் என்பது அனைவரின் கருத்தாக இருக்கும். தற்போது வெளியான தகவல் அந்த கருத்துக்கு வலு சேர்த்துள்ளது. இதற்கு காரணமாக கூறப்படுவது விஜய்யின் படங்களுக்கு குடும்ப ரசிகர்களின் ஆதரவும், அஜித்தின் படங்களுக்கு இளைஞர்களின் ஆதரவும் இருக்கிறது என்பதுதான்.

இரண்டு படங்களும் வழக்கம் போல தங்கள் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. பொங்கல் விடுமுறை ஒருவாரம் இருப்பதால் இரண்டு படங்களுக்குமே நல்ல வசூல் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. துணிவு முதலிடத்தை தக்கவைக்கிறதா அல்லது வாரிசு முதலிடத்துக்கு முன்னேறுகிறதா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

First published:

Tags: Actor Ajith, Actor Thalapathy Vijay, Thunivu, Varisu