Home /News /entertainment /

பாலியல் புகார் - 'ஓ சொல்றியா மாமா' நடன இயக்குனர் கணேஷ் ஆச்சர்யா மீது எப்ஐஆர் பதிவு

பாலியல் புகார் - 'ஓ சொல்றியா மாமா' நடன இயக்குனர் கணேஷ் ஆச்சர்யா மீது எப்ஐஆர் பதிவு

கணேஷ் ஆச்சர்யா

கணேஷ் ஆச்சர்யா

2020-ல் கணேஷ் ஆச்சார்யா மீது அந்த டான்சர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவரை இந்தியன் பிலிம் அன்ட் டெலிவிஷன் கோரியோகிராபர் அசோஷியேஷனில் இருந்து நீக்கினர்.

இந்தியின் முன்னணி நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா. தனது குண்டு உடம்பை வைத்து அனாயாசமாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்தவர். முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடனம் அமைத்து வந்தவர், சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற, ஓ சொல்றியா மாமா பாடலுக்கும் நடனம் அமைத்திருந்தார். அவர் மீது கூறப்பட்ட பாலியல் புகார் மீது மும்பை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கணேஷ் ஆச்சார்யா மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.

கணேஷ் ஆச்சார்யா தன்னிடம் பாலியல் அத்துமீறியதாகவும், வற்புறுத்தி ஃபோர்ன் படங்களை பார்க்க வைத்ததாகவும் டான்ஸர் ஒருவர் 2020-ல் புகார் அளித்திருந்தார். அந்த புகாரை கணேஷ் ஆச்சார்யா மறுத்தார். அந்த நடன பெண்மணிக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். முக்கியமாக மீடூ இயக்கத்தை இந்தியில் முன்னெடுத்தவர்களில் ஒருவரான தனுஸ்ரீ தத்தா கணேஷ் ஆச்சார்யா மீது குற்றம்சாட்டி இருந்தார். அந்த புகாரை விசாரித்த போலீசார் அந்த டர்ன்சர் கூறிய புகாருக்கு முகாந்திரம் இருப்பதாக கருதி தற்போது கணேஷ் ஆச்சார்யா மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். பல்வேறு பிரிவுகளில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து கணேஷ் ஆச்சார்யா இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

பீஸ்ட் ட்ரெய்லருக்கே இந்த கூட்டமா? - அசந்துபோன திரையரங்கு!

2020-ல் கணேஷ் ஆச்சார்யா மீது அந்த டான்சர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவரை இந்தியன் பிலிம் அன்ட் டெலிவிஷன் கோரியோகிராபர் அசோஷியேஷனில் இருந்து நீக்கினர். அப்போது அந்த அசோசியேசனின் பொதுச்செயலாளராக கணேஷ் ஆச்சார்யா இருந்தார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு அந்த நடன பெண்மணிக்கு நீதிக்கான வாசல் திறந்துள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான சிறைத் தண்டனையை கணேஷ் ஆச்சார்யா எதிர்கொள்ள நேரிடும் என்கிறார்கள்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

அடுத்த செய்தி