கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிக் பாஸ் பிரபலம் - படப்பிடிப்புக்கு சென்றதால் பரபரப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிக் பாஸ் பிரபலம் - படப்பிடிப்புக்கு சென்றதால் பரபரப்பு

கவுஹர் கான்

கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாத கவுஹர் கான், படப்பிடிப்புக்கு சென்றுள்ளார்.

  • Share this:
கொரோனா தொற்றுடன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததால், பிக் பாஸ் பிரபலத்தின் மீது எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது.

புகழ் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்டு பிரபலமானவர் கவுஹர் கான். மும்பையில் வசித்து வரும் அவர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் கவுஹர் கானுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அவருக்கு அறிவுறுத்தினர்.

ஆனால் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாத கவுஹர் கான், படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். இதையடுத்து அலட்சியத்துடன் கொரோனா தடுப்பு விதிகளை மீறிய அவர் மீது ஓஷிவாரா காவல் நிலையத்தில் மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தும் படப்பிடிப்புக்கு சென்ற கவுஹர் கானை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: