KE Gnanavel Raja: ஞானவேல் ராஜா மீதான அவதூறு வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

ஞானவேல் ராஜா

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஞானவேல்ராஜா கடந்த 2019-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

  • Share this:
    திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக, சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நடிகரும், தயாரிப்பாளருமான சசிகுமாரின் பட நிறுவனத்தில் அவரது இணை தயாரிப்பாளராக இருந்த அவரின் உறவினர் அசோக்குமார் கடன் தொல்லை காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் சினிமா துறையில் நடிகர் சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டது குறித்தும், சினிமா பைனான்சியர் போத்ரா குறித்தும் ஞானவேல்ராஜா வார பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார்.

    அதில், சினிமா பைனான்சியர் போத்ராவை குறிப்பிட்டு பைனான்சியர்கள் கெடுபிடியாக நடந்து கொள்கிறார்கள் என்று கருத்துகளை தெரிவித்து இருந்தார். இதையடுத்து, ஞானவேல் ராஜா, மற்றும் ஜூனியர் விகடன் மீது பைனான்சியர் போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தாக்கல் செய்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஞானவேல்ராஜா கடந்த 2019-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் தனக்கு எதிரான வழக்கில் எந்த வித ஆதாரங்கள் இல்லை என்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

    பைனான்சியர் போத்ரா இறந்துவிட்ட நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஞானவேல்ராஜா மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என கூறி அவதூறு வழக்கை ரத்து செயது உத்தரவிட்டார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: