Home /News /entertainment /

பிரபல சினிமா தயாரிப்பாளர் அன்புச் செழியன் மகளுக்கு திருமணம்

பிரபல சினிமா தயாரிப்பாளர் அன்புச் செழியன் மகளுக்கு திருமணம்

அன்பு செழியன் மகள் திருமணம்

அன்பு செழியன் மகள் திருமணம்

அன்புசெழியன் மகள் சுஷ்மிதா கோபுரம் சினிமாஸின் உரிமையாளராகவும் உள்ளார். அண்மையில் மதுரையில் மூன்று ஸ்கிரீன்களுடன் கூடிய மல்டிபிளக்ஸ் திரையரங்கத்தையும் இவர் திறந்துள்ளார்.

    பிரபல தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பைனான்சியர் மற்றும் திரையரங்கு அதிபர் அன்புச்செழியனின் மகளுக்கு சன் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் சரணுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.

    இல்லற வாழ்க்கையில் இணையும் இளம் தொழில்முனைவோர்: கோபுரம் சினிமாஸ் உரிமையாளார் சுஷ்மிதா மற்றும் சன் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் சரணின் திருமணம் பிப்ரவரி 21 அன்று நடைபெறவுள்ளது.

    பிரபல சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான G.N.அன்புசெழியனின் மகள் சுஸ்மிதா அன்புசெழியன். சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் உளவியல் பாடத்தில் இளநிலைப் பட்டமும், அதைத் தொடர்ந்து எம்பிஏ பட்டமும் பெற்றிருக்கிறார். 25 வயதில் 50-க்கும் மேற்பட்ட திரையரங்குகளை நிர்வகித்து வருகிறார்.

    மேலும் இவர் கோபுரம் சினிமாஸின் உரிமையாளராகவும் உள்ளார். அண்மையில் மதுரையில் மூன்று ஸ்கிரீன்களுடன் கூடிய மல்டிபிளக்ஸ் திரையரங்கத்தையும் இவர் திறந்துள்ளார். இந்நிலையில், சுஷ்மிதாவுக்கு  சன் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் சரணின் திருமணம் 21 பிப்ரவரி 2022 அன்று திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவுள்ளது.

    இதையும் படிங்க: நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று


    காலையில் திருமணமும், மாலையில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறும் என்று பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுள்ளது. குடிமைப்பணி தேர்வுகளுக்கான பயிற்சி நிறுவனங்களில் முன்னிலை வகிக்கும் சன் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர்களில் ஒருவரான ராஜேந்திரன் ஐஏஸ்-இன் மகன் தான் சரண். தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மைத்துனர் ராஜேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

    சரண் பி டெக் மற்றும் எம்பிஏ முடித்து சன் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநராக உள்ளார்.திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி கொவிட் விதிமுறைகளை பின்பற்றி பிரமாண்டமாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிங்க: மீண்டும் வில்லனாகும் செல்வராகவன்...!

    Published by:Murugesh M
    First published:

    Tags: Anbuchezhian, Kollywood

    அடுத்த செய்தி