கடன் பிரச்னையால் விஸ்வாசம் படத்தை வெளியிட திடீர் தடை...! ரசிகர்கள் அதிர்ச்சி

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் விஸ்வாசம் படத்தை வெளியிட தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

news18
Updated: January 9, 2019, 2:17 PM IST
கடன் பிரச்னையால் விஸ்வாசம் படத்தை வெளியிட திடீர் தடை...! ரசிகர்கள் அதிர்ச்சி
விஸ்வாசம் பட போஸ்டர்
news18
Updated: January 9, 2019, 2:17 PM IST
கடன் பிரச்னை காரணமாக ஈரோடு, திருப்பூர், கோவை விஸ்வாசம் படத்தை வெளியிட நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்துள்ள படம் விஸ்வாசம். ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை இந்தப் படம் ரிலீசாகிறது. பேட்ட படத்துடன் விஸ்வாசம் வெளியாவதால் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Viswasam Movie - Ajith

இந்த நிலையில் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளின் விநியோகஸ்தர் சாய்பாபா பெற்று இருந்த கடன் பாக்கி ரூ.78 லட்சம் திருப்பி தராததால் அப்பகுதிகளில் படத்தை வெளியிட தடை கோரி சினிமா பைனான்சியர் உமாபதி வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்ககோரி பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வர உள்ளது.

பேட்ட VS விஸ்வாசம்... ரிலீஸுக்கு முன்னரே லாபத்தை ஈட்டும் திரைப்படம் - வீடியோ
Loading...
First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...