ஒளிப்பதிவு திருத்த சட்டத்தால் பராசக்தி, ரத்தக்கண்ணீர் போன்ற படங்களை கூட முடக்க முடியும்: சத்யராஜ் பேச்சு!

ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா

ஒளிப்பதிவு திருத்த சட்டம் வந்தால், ஒரு கொள்கையின் அடிப்படையில், படத்தை தடை செய்ய பல காரணங்களை கண்டுபிடிக்க முடியும். இது படைப்பாளிகளின் கருத்துரிமையை பறிக்கும். படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள் வித்யாசமான, முற்போக்கான படங்களை எடுக்க பயப்படும் சூழல் ஏற்படும்.

  • Share this:
ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவால் பராசக்தி, ரத்தக்கண்ணீர் உள்ளிட்ட கடந்த காலங்களில் பகுத்தறிவு சிந்தனைகளுடன் வந்த முற்போக்கான படங்களை கூட முடக்கிபோட்டு விட முடியும் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்ட திரைப்படங்களை மீண்டும் ஆய்வு செய்து தணிக்கை சான்றிதழை ரத்து செய்யும் வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான மசோதாவை மத்தியஅரசு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் ஒரு திரைப்படத்தை மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் தடை செய்ய முடியும்.இந்த மசோதாவுக்கு திரைதுறையினர் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் திரைப்பட தணிக்கை சட்டத்திருத்த எதிர்ப்பு இணைய வழி கருத்தரங்கம் நடந்தது.இக்கருத்தரங்கில் எழுத்தாளர்கள், திரைத்துறை கலைஞர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கெடுத்து இச்சட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

கூட்டத்தில் பேசிய நடிகர் சத்யராஜ், ‘இச்சட்டம் வந்தால், ஒரு கொள்கையின் அடிப்படையில், படத்தை தடை செய்ய பல காரணங்களை கண்டுபிடிக்க முடியும். இது படைப்பாளிகளின் கருத்துரிமையை பறிக்கும். படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள் வித்யாசமான, முற்போக்கான படங்களை எடுக்க பயப்படும் சூழல் ஏற்படும்.

இதையும் படிங்க: அண்ணாவின் கடைசி பொது நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட திலீப் குமார்...


பராசக்தி, ரத்தக்கண்ணீர் உள்ளிட்ட கடந்த காலங்களில் பகுத்தறிவு சிந்தனைகளுடன் வந்த முற்போக்கான படங்களை கூட முடக்கிபோட்டு விட முடியும். மீண்டும் இதுபோன்ற படங்கள் எப்படி வரும்? வெற்றிமாறன், மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்ற படைப்பாளிகள் இச்சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள் என்றால், மத்திய அரசு மறுபரிசீலனை செய்வது நாட்டிற்கு நல்லது. எனவே, மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும்’என்று கூறினார்.
Published by:Murugesh M
First published: