Home /News /entertainment /

இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று இல்லை

இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று இல்லை

மணிரத்னம்

மணிரத்னம்

மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருந்தார். இந்த நிலையில்தான் காய்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. 

இயக்குநர் மணிரத்னம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என காலை முதல் செய்திகள் பரவின. இந்த நிலையில் மணிரத்னத்திற்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது. எனவே பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம் என நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு சுஹாசினி மணிரத்னம் கூறினார்.

அத்துடன் அவருக்கு பரிசோதனைகளும் நடைபெற்றன. இதை தொடர்ந்து தற்போது மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது என்பதை அவரின் மக்கள் தொடர்பு அதிகாரி ஜான்சன் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர்.

Also read... இன்று மாலை வெளியாகிறது ’குலுகுலு’ படத்தின் முதல் பாடல் வீடியோ!

மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருந்தார். இந்த நிலையில்தான் காய்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலுக்கான சிகிச்சை முடிந்தவுடன் நாளை மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்ப வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Mani ratnam

அடுத்த செய்தி