காளி பட சர்ச்சை தொடர்பாக ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
காளி வேடம் அணிந்த ஒரு பெண் சிகரெட் புகைப்பது போன்றும், ஓரினச் சேர்க்கையாளர்களின் கொடியை வைத்திருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டு லீனா மணிமேகலை போஸ்டர் ஒன்றை வெளியிட்டார்.
இதனைதொடர்ந்து இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி லீனா மணிமேகலைக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அபிஷேக் குமார் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரன வழக்கறிஞர் ராஜ் கௌவுரவ், இந்து கடவுளை இழிவுபடுத்தி வார்த்தையால் கூற முடியாத அளவிற்கு லீனா மணிமேகலை மோசமாக சித்தரித்து உள்ளதாகவும், படத்தின் போஸ்டரில் கடவுள் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
Also read... The Gray Man பிரீமியர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்தியா வருகிறார்கள் ரூசோ பிரதர்ஸ்
இவை இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக வாதத்தை முன்வைத்தார். அப்போது நீதிபதி அபிஷேக் குமார் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என காளி திரைப்படத்தின் இயக்குனர் லீனா மணிமேகலை மற்றும் அவரின் தயாரிப்பு நிறுவனமான டூரிங் டாக்கீஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.