• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Saravana Bhavan: படமாகும் சரவணபவன் ராஜகோபால், ஜீவஜோதி கதை

Saravana Bhavan: படமாகும் சரவணபவன் ராஜகோபால், ஜீவஜோதி கதை

ராஜகோபால் - ஜீவஜோதி

ராஜகோபால் - ஜீவஜோதி

ஜீவஜோதியின் மீதான ராஜகோபாலின் ஆசை ஊடகங்களில் வெளிவந்த போதே அவரது புகழ் மங்கத் தொடங்கியது. 2019-ல் போலீஸில் சரணடைந்தவர் சில தினங்களில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார்.

  • Share this:
    சரவணபவன் அண்ணாச்சி என்றால், சரவணபவன் செயின் ஆஃப் ஹோட்டல்களை நிறுவிய ராஜகோபாலின் பெயரும், உருவமும்தான் நினைவு வரும். அவர் ஜீவஜோதி மீது கொண்ட காமமும், கணவனை கொலை செய்ததற்காக ஜீவஜோதி நடத்திய சட்ட போராட்டத்தையும் மையப்படுத்திய ஒரு திரைப்படத்தை தயாரிக்கிறார்கள்.

    தூத்துக்குடியை பூர்வீகமாகக் கொண்ட அடித்தட்டு குடும்பத்தைச் சேர்ந்த ராஜகோபால், 1981-ல் சென்னையில் ஒரு ஹோட்டலை திறந்து குறுகிய காலத்தில் 22 நாடுகளில் கிளைகளை திறந்தது உழைப்பின், திறமையின் உதாரணங்கள். சென்னையில் தீர்க்கமற நிறைந்திருந்த உடுப்பி, புகாரி ஹோட்டல்களை பின்னுக்குத் தள்ளி சரவணபவன் முதலிடம் பிடித்தது. ராஜகோபால் முருக பக்தர். ஹோட்டல் கல்லாவில் பக்தி மணம் கமழும். சொந்த ஊரில் புன்னை ஸ்ரீ சீனிவாச பெருமாளுக்கு ஆலயம் கட்டியிருக்கிறார். அப்படிப்பட்டவர் ஜோசியத்தின் மீதிருந்த நம்பிக்கையில் தனது ஹோட்டலில் மேனேஜராக இருந்தவரின் மகள் ஜீவஜோதியை திருமணம் செய்ய ஆசைப்பட்டார். ஜீவஜோதி திருமணமானவர். ஆனாலும், ராஜகோபால் தனது ஆசைக்கு இணங்க ஜீவஜோதியை வற்புறுத்தினார். வன்முறையும் கைக்கொண்டார். கடைசியில், 2001-ல் ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை செய்யப்பட்டார். 18 வருடம் நீண்ட இந்த கொலை வழக்கில் ராஜகோபால் குற்றவாளி என ஆயுள்தண்டனை விதித்தது நீதிமன்றம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஜீவஜோதியின் மீதான ராஜகோபாலின் ஆசை ஊடகங்களில் வெளிவந்த போதே அவரது புகழ் மங்கத் தொடங்கியது. 2019-ல் போலீஸில் சரணடைந்தவர் சில தினங்களில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார். உழைப்புக்கும், திறமைக்கும் உதாரணமாக இருந்தவர் பெண் மீது கொண்ட காமத்தால் கிரிமினலாக சிறையிலேயே செத்துப் போனார். இந்தக் கதையை பாலிவுட்டின் ஜங்க்லி நிறுவனம் திரைப்படமாக எடுக்கிறது. தோசை கிங் ராஜகோபாலுக்கு எதிரான ஜீவஜோதியின் சட்டப் போராட்டத்தை படமாக எடுப்பதாக விளம்பரப்படுத்தியுள்ளனர்.

    செக்ஸும், க்ரைமும் யூனிவர்சல் சந்தை கொண்டவை. எந்த மொழியில் வேண்டுமானாலும் எடுக்கலாம். நியாயமாக எடுப்பார்களா என்பதுதான் கேள்வியே.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: