Home /News /entertainment /

ஒமைக்ரான் பாதிப்பால் 1500 கோடி நஷ்டத்தில் திரையுலகம்

ஒமைக்ரான் பாதிப்பால் 1500 கோடி நஷ்டத்தில் திரையுலகம்

விஜய் - அஜித்

விஜய் - அஜித்

குறிப்பாக, ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் திரைப்படம் திட்டமிட்ட தேதியில் வெளிவராததால் அதன் தயாரிப்பு நிறுவனத்திற்கு வட்டியாக மட்டுமே 200 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    ஒமைக்ரான் பாதிப்பால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்திய திரைத்துறைக்கு 1,500 கோடி ரூபாய் வரை வர்த்தக இழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கொரோனா பரவல் குறைந்த நிலையில், அஜித்தின் வலிமை, ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர், பிரபாஸின் ராதே ஷ்யாம் என இந்த ஆண்டின் தொடக்கமே மெகா பட்ஜெட் படங்களால், இந்திய பாக்ஸ் ஆபீஸ் களைகட்ட காத்திருந்தது. ஆனால், ஒமைக்ரான் வடிவில் வந்த பிரச்சனை இந்திய திரைத் துறையை மீண்டும் புரட்டிப்போட்டுவிட்டது.

    நாடு முழுவதும் திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த மூன்று மெகா திரைப்படங்களையும் வெளியிடும் திட்டம் தள்ளிப்போனது. இதனால், இந்திய திரைத்துறைக்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை வர்த்தக இழப்பு ஏற்பட்டிருப்பதாக திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதில், தமிழகத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

    குறிப்பாக, ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் திரைப்படம் திட்டமிட்ட தேதியில் வெளிவராததால் அதன் தயாரிப்பு நிறுவனத்திற்கு வட்டியாக மட்டுமே 200 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதேபோல, அஜித்தின் வலிமை, பிரபாஸின் ராதே ஷ்யாம் என மெகா பட்ஜெட் படங்கள் அனைத்தும் திட்டமிட்ட தேதிகளில் வெளியாகாததால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன.

    தனுஷுடனான பிரிவுக்குப் பிறகு வெளியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ஸ்பெஷல் புகைப்படம்

    நிலைமை கட்டுக்குள் வரும் பட்சத்தில், ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மார்ச் 18 அல்லது ஏப்ரல் 28-ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, வலிமை திரைப்படம் மார்ச் இறுதியிலும், ராதே ஷ்யாம் திரைப்படம் அதன் பின்னரும் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும், விஜய்யின் பீஸ்ட், கேஜிஃஎப் 2 ஆகிய படங்களை ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் வெளியிட திட்டமிட்டு வருவதால், கூடிய விரைவில் இந்தப் படங்களை திரைக்கு கொண்டு வருவதன் மூலமே இந்திய திரைத் துறையை மீட்டெடுக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil movies, Telugu movie

    அடுத்த செய்தி