Home /News /entertainment /

திரைப்பட விமர்சகர் கௌசிக் மாரடைப்பால் மரணம்

திரைப்பட விமர்சகர் கௌசிக் மாரடைப்பால் மரணம்

கௌசிக்

கௌசிக்

ராகவா லாரன்ஸ், துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், அதிதி ராவ் ஹைதாரி, வெங்கட் பிரபு உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
    பிரபல சினிமா விமர்சகர் மற்றும் தொகுப்பாளர் கௌசிக் மாரடைப்பால் நேற்று உயிரிழந்துள்ளார்.

    தனியார் ஊடகங்களில் பணிபுரிந்துகொண்டிருந்த கௌசிக் சினிமா விமர்சகராகவும் இருந்துவந்தார். சமூக வலைதளங்கள் மூலம் சினிமா தொடர்பான செய்திகளை வெளியிட்டு கொண்டிருந்தார்.

    இதனிடையே, நேற்று மதியம் 2 மணிக்கு மதிய உணவு உண்ட பின் உறங்க சென்றவர் மாரடைப்பால் உறக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    ஜீவி-2 Preview காட்சிக்கு வரவேண்டியவர் வரவில்லை. நண்பர்கள் தொலைப்பேசியில் அழைத்தபோதும் அழைப்பை ஏற்கவில்லை. குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்கள் அதற்கும் பதில் இல்லை. எனவே அவர் தனியார் இணையதளத்தின் நேர்காணலில் இருப்பார் என்று நினைத்துள்ளனர். இரவு அவர் உயிரிழந்தார் என்ற செய்தி ஊடக துறையிலும் மட்டுமில்லாமல் சினிமாத் துறையிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







    Also read... Ajith 61: படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள விசாகப்பட்டினம் சென்றார் அஜித்!

    ராகவா லாரன்ஸ், துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், அதிதி ராவ் ஹைதாரி, வெங்கட் பிரபு உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment

    அடுத்த செய்தி