ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஆபாச பேச்சு..குடித்துவிட்டு ரகளை - நடிகையின் தம்பியை தேடிப்பிடித்து கைது செய்த போலீஸ்!

ஆபாச பேச்சு..குடித்துவிட்டு ரகளை - நடிகையின் தம்பியை தேடிப்பிடித்து கைது செய்த போலீஸ்!

நடிகை பாபிலோனா மற்றும் அவரது தம்பி விக்னேஷ்

நடிகை பாபிலோனா மற்றும் அவரது தம்பி விக்னேஷ்

இவர் மீது ஏற்கனவே விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி என பல்வேறு வழக்கு பதிவுகள் நிலுவையில் உள்ளன.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

திரைப்பட நடிகை பாபிலோனாவின் தம்பி விக்கி (எ) விக்னேஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மது போதையில் நடிகை பாபிலோனாவின் தம்பி விக்னேஷ் வீட்டின் அருகே உள்ள கடையில் உள்ளவரை அடித்து ரூ. 1,500 பணத்தை பறித்து சென்றதாக புகார் எழுந்தது. அதே போன்று, விருகம்பாக்கம் காவல் நிலையத்திலும் மதுபோதையில் வந்து பிரச்னை செய்ததாக கூறப்படுகின்றது. இந்த  காரணத்தினால் விக்னேஷ் மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

Also read...  'வாடகை தாய் விவகாரம்.. அதிகாரிகளே முடிவு செய்வார்கள்' - நயன் விக்கி ஜோடி குறித்து அமைச்சர் விளக்கம்

இவர் மீது ஏற்கனவே விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி என பல்வேறு வழக்கு பதிவுகள் நிலுவையில் உள்ளன. இவரிடமிருந்து ஒரு பட்டாகத்தி மற்றும் ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Crime News