Home /News /entertainment /

சூரி மற்றும் புகழ் சண்டை... எதற்கும் துணிந்தவன் ஷூட்டிங்கில் நடந்தது என்ன? 

சூரி மற்றும் புகழ் சண்டை... எதற்கும் துணிந்தவன் ஷூட்டிங்கில் நடந்தது என்ன? 

சூரி - புகழ்

சூரி - புகழ்

கொரோனா காரணமாக ஓட்டலில் உள்ள நீச்சல் குளத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அங்கு சென்றது மட்டுமில்லாமல் மாறி, மாறி நீச்சல் குளத்திற்குள் போனை தேடியுள்ளனர்.

  எதற்கும் துணிந்தவன் படத்திற்கான புரோமோஷன் ஷோ சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் பங்கேற்ற சூரியும், குக் வித் கோமாளி புகழும் ஜாலியாக மாறி, மாறி சண்டை போட்டுக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

  உலக அளவில் கவனம் ஈர்த்த ஜெய்பீம் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை பாண்டியராஜ் இயக்கியுள்ளார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா அருள்மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், இளவரசு, தேவதர்ஷினி, சூரி, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

  இந்தத் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இதனையடுத்து கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தின் புரோமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. வழக்கம் போல் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் என்பதால் சன் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சூர்யாவை தவிர, சத்யராஜ், இயக்குநர் பாண்டியராஜ், சூரி, புகழ், பிரியா அருள்மோகன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர். இதற்கான புரோமோ வீடியோக்களை சன் தொலைக்காட்சி வெளியிட்டு வருகிறது.

  தற்போது வெளியாகியுள்ள புரோமோ காட்சியில் சூரி, புகழ் இருவரும் எதற்கும் துணிந்தவன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து ஒருவரை, ஒருவர் கலாய்த்துக்கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பாண்டியராஜ் தனக்கு இனி அனைத்து படங்களிலும் வாய்ப்பளிப்பேன் என உறுதி அளித்ததாக புகழ் சொல்கிறார். அப்போது குறுக்கிடும் சூரி என் லக்கேஜ் முதற்கொண்டு அங்க தான் இருக்கு, எனக்கு லெட்டர் கூட அண்ணன் ஆபீஸ் அட்ரஸுக்கு தான் வருது என சொல்கிறார். அதெல்லாம் இல்லைங்க.. நீங்க வாடகை கொடுக்காததால ரூமை காலி பண்ண சொல்லிட்டு, என்ன தங்க சொல்லிட்டாரு என புகழ் கலாய்க்கிறார்.

  ஒரு கட்டத்தில் சூரி புகழால் தனக்கு ஒன்றறை லட்சம் நஷ்டம் என கூறினார். இந்த விஷயம் சத்யராஜ் சாருக்கு தெரியாது சொல்லுங்க என சூரியை பாண்டியராஜ் உசுப்பேற்றுகிறார். ஷூட்டிங் முடிந்து கடைசி நாளில், சூரி ஓட்டலில் இருந்து கிளம்ப தயாராகி இருக்கிறார். அப்போது புகழ் நீச்சல் குளத்திற்குள் கீழ் நின்று வீடியோ எடுக்கலாம், செல் போனுக்கு எதுவும் ஆகாது என சொல்லி சூரியிடம் போனைக் கேட்டுள்ளார்.

  புதிதாக வாங்கி 6 நாட்கள் மட்டுமே ஆனது என்பதால் சூரி போனை தரமாட்டேன் என எவ்வளவோ அடம்பிடித்தும், புகழ் போனை வாங்கி வீடியோ எடுத்துள்ளார். இருவரும் நீச்சல் குளத்திற்குள் நின்று தண்ணீருக்கு அடியில் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது போன் கை தவறி கீழே விழுந்து, நீச்சல் குளத்தில் இருந்து அதை வெளியில் எடுக்க கஷ்டப்பட்டு இருக்கின்றனர். புகழின் போன் அப்போது வேலை செய்யாமல் போய்விட்டதாம், சூரியின் போன் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது ஆன் ஆகவில்லையாம்.

  ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷ் வெளியிட்ட மகிழ்ச்சியான புகைப்படம்!  பிளாட் ஃபார்முக்கு வந்த விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரகேசர் - காரணம் என்ன?

  இதனால் தனக்கு ஒன்றரை லட்சம் நஷ்டம் என சூரி தெரிவித்துள்ளார். பதிலுக்கு புகழும் என் போனும் தான் அண்ணே வீணாபோச்சு என இருவரும் மாறி, மாறி கலாய்த்து கொள்கின்றனர். கொரோனா காரணமாக ஓட்டலில் உள்ள நீச்சல் குளத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அங்கு சென்றது மட்டுமில்லாமல் மாறி, மாறி நீச்சல் குளத்திற்குள் போனை தேடியுள்ளனர். இதை எல்லாம் சிசிடிவியில் பார்த்த ஓட்டல் நிர்வாகம் அடுத்த நாள் நீச்சல் குளத்தை மூடிவிட்டதாக சூரி தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்க
  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Soori, Sun TV

  அடுத்த செய்தி